
சின்னச்சாமி அண்ணா வண்டியை நிறுத்திவிட்டு தூக்கம் தொலைத்த முகத்தோடு சோர்வாக வந்தார். “வாண்ணா” என்று ஸ்டூலை எடுத்துக் கொடுத்தேன். “வேண்டாம்” என்று சொல்லி விட்டு கடைப்பலகையின் வலது ஓரம் அமர்ந்தார். முதுகுப்பக்கம் சட்டை வேர்வையில் ஒட்டியிருந்தது. நான் கடையைவிட்டு இறங்கினேன். தலை குனிந்தபடி தரையில் ஓரிடத்தையே பார்த்தபடி இருந்தார். நேற்று சாயுங்காலம் வந்து நின்றவரை “உக்காருண்ணா”…