
அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள்…