கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு

சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை…

எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்…

பெயர் புரட்சி

மலேசியாவில் 80-ம் ஆண்டுகளில் இந்திய சமூகத்தில் ஒரு ‘புரட்சி’ சத்தமில்லாமல் நடந்தது.  ஆனால் அது சற்று விநோதமான மாற்றம் என்பதால் யாரும் புரட்சி பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இப்போது மீட்டுணர்ந்து பார்க்கையில், அந்த விநோத புரட்சிக்கு மூலமாக ஒரு புத்தகம் இருந்திருப்பதையும் அந்தப் புரட்சியில் என் அப்பாவும் ‘களமிறங்கிப் போராடியிருப்பதையும்’ என் அண்ணனும் நானும் அதற்கு…

அந்தக் கப்பல் வந்துகொண்டே இருக்கிறது

சமகால தமிழ் சினிமாக்களில் அல்லது வெப்சீரீஸ்களில் பொறுப்புத்துறப்பு என்று (disclaimer என்பதை மிக மோசமான மொழிபெயர்ப்பில்) தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு காட்டப்படும். நானும் அப்படியான பொறுப்புத்துறப்போடு கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். மலேசிய கவிதைகளை பற்றியான இந்தக் கட்டுரை பத்தொன்பது கவிதை தொகுப்புகளை அடிப்படையாக கொண்டது. எனது கருத்துக்களும் விமர்சனங்களும் இந்தத் தொகுப்புகளின்பாற்பட்டதே. இந்த பத்தொன்பது தொகுப்பை…

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக்…

பேய்ச்சி சர்ச்சை குறித்து சிறு விளக்கம்

கடந்த ஒரு மாத காலமாகப் பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுவதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது பொதுவாக இலக்கியச் சூழலில் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் இம்முறை வல்லினம் தரப்பில் இருந்து  போலிஸ் புகாரும்  கடித வழி தொடர்பாடல்களும் நடத்தப்பட்டன. முதல் புகார் பேய்ச்சி நாவலின் சில பகுதிகள் மட்டும் அதன் ஆசிரியர் ம.நவீன்…

தமிழ் எங்கள் உயிர் (நிதி வழங்கியோர் விபரம்)

1.பினாங்குவாழ் மக்கள் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் பினாங்கு முதன்மை இடம் வகிப்பதாக 17.03.1955-இல் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இந்நிலை தொடர பினாங்கு மக்களும் பினாங்கு தொழில் நிலையங்களும் தங்கள் தமிழ் உணர்வை எடுத்துக் காட்டும் வகையில் பட்டியலில் பெயர் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மேலும், சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ ஆகிய…

நவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு

“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச்…

மீண்டு நிலைத்தவை

(2018இல், சென்னையில் மீண்டும் நிலைத்த நிழல்கள் நூலை வெளியிட்டு ஜெயமோகன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.) சுந்தரராமசாமியை நினைவுக்கூர்ந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியர் நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்பொழுது சுந்தரராமசாமி சொன்னார்:  “பந்திப்பாய் விரித்திருக்கிறார்” என்று. அது குமரி மாவட்டத்தில் உபயோகப்படுத்தக்கூடிய…

தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…

வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

அக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து…

புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்

உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு…

நாவல் என்பது… முகாம் அனுபவம்

வல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட  எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து…

சு. வேணுகோபாலின் நாட்டார் வழக்காற்றியல் ஒருபார்வை

21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே…

இன்றைய உலக இலக்கியம்: சில புரிதல்கள்

கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது.  சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின்…

மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

வல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று…

உரைவழி உணர்ந்த உண்மை

ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற  ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு…