
”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார். அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது.…











