
என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது…