
எனது ஞாபகக் கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும் உனது காதலை அள்ளிப் பருகியபடியே உயிர்த்திருக்கிறேன். நேசத்தின் கரங்களில் நாம் சிறு பிள்ளையாய் தவழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அதீத அன்பினால் மெருகூட்டப்பட்ட நாட்களின் மீது வீசிய ஒளிக்கற்றைகள் ஒன்றுதிரண்டு முழுநிலவாய் வான் மீதேறிவிட்டதென சொல்லி இறுகத் தழுவிக் கொண்டாய். இதழ்களைச் சுவைத்துவிட்டு ‘நான் போதையேறிக்…