இலக்கியத்தின் வழி தேசிய அடையாளம்

இந்த மாதம் எதிர்ப்பாராவிதமாக ‘இலக்கிய மாதமாக’ அமைந்து விட்டது.  நவம்பர் 1, வல்லினம் கலை இலக்கிய விழாவும் அதைத் தொடர்ந்து 6,7-ல் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்பும் சிறப்பாக அமைந்தன. அனைத்துலக தரம் வாய்ந்த சிங்கப்பூர் இலக்கிய விழாவில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் மிக அறிதாகவே கிடைப்பதாக அறிகிறேன். ஆக கடைசியாக இருபத்து நான்கு…

மசியின் நிறங்கள்

பல்லினங்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தில் ஒவ்வொரு இனமும் தன்னுடைய தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்கிறது. அதேவேளையில் அது தனக்குப் புறத்தே இருக்கிற பிற இனங்களின் பண்பாட்டிலிருந்து தேவையானதை தன்வயமாக்கிக்கொள்வதோடு தன்னிடமிருப்பதை பகிர்ந்தும்கொள்கிறது. நாம்- நாங்கள், அவர்கள் – மற்றவர்கள் என்கிற பாகுபாடுகளைக் கடந்து இடையறாது நிகழ்ந்தவாறே இருக்கும் இந்தப் பரிமாற்றம் பண்பாட்டுப் பொதுமைகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு…

இலக்கியத்தில் அரசியல்

மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி…

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…

விவாதங்கள் தொடர வேண்டும்

தமிழ்மொழியில் வெளியாகும் படைப்புகள் இன்று பல தேசங்களில் வாழும் தமிழர்கள் படிக்க ஏதுவாய் வினியோகிக்கப்படுகின்றன. இணையம் மூலமாகவும் பலரை சென்றடைகின்றன. இந்தஒரு சூழ்நிலையில், படைப்பு என்பதன் தன்மையும் அடையாளமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவும் வெளியும் மாறியமைந்துள்ளன. குறிப்பிட்ட படைப்பானது, அது உருவான சமூக, பண்பாட்டு வெளிக்கு அப்பாற்பட்ட வாசகர்களை அடைகிற…

வகுப்பறையின் கடைசி நாற்காலி

‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற…

ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும்…

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

வாசனைபூசிய வாழ்வு

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…

கலை வகுப்புகள் மாணவ மாணவியரின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும்.

It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.” ― Thucydides பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்-அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரஸ்ய மிக்கவையாக…

பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன்…