வருகை

கொல்லைக்கதவின் நாதாங்கி கொக்கியை எடுத்து ஆணியில் தொங்கவிடும்போது விசாலாட்சியின் கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தன. முகம் கைகால்களை கழுவிக்கொண்டு போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கதவை இழுத்து மூடும்போது இதென்ன இப்படிப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் கொடுத்தது. களவைக்காணும் ஆர்வம் பின்னின்று தள்ளுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தானும் ஒரு கள்ளத்தனத்தில் இறங்குவதுபோல தோன்ற செண்பகச் செடிபக்கம்…

திரும்புதலற்ற பாதை

காளைப் பாண்டியன் நைட் ஷிப்டுக்கு புறப்படுவதற்காக வண்டியைக் கிளப்பிய அதே நேரத்தில்தான் ஹாஸ்டலுக்குப் போகும் பாதையில் காதில் ஹெட்போனுடன் வந்துகொண்டிருந்த காசிநாத்தை ஆத்திரத்துடன் வழிமறித்தான் அமித். கௌசியிடம் முகம் பார்த்துச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியது காளைப்பாண்டியனுக்கு லேசான சங்கடத்தைக் கொடுத்திருந்தது. 1 நம்பியூரிலிருந்து மில்லுக்குப் போக அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான். ஆனால், காளை அரைமணி நேரத்துக்கு முன்பாகவே…

சரவாக் பழங்குடியின மக்கள்

(பகுதி 1) மனித உரிமை மீதான பார்வை சமீப காலக்கட்டத்தில் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வுகள் பல வழிகளில் போதிக்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கான மனித உரிமை பாதுக்காக்கப்பட வேண்டி இங்கு நிறைய விவாதங்களும் பேச்சுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், இங்கு முக்கியமாக…

இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

‘2020-இல்  அபிராமி கணேசனுக்கான இளம் எழுத்தாளர் விருதை வல்லினம் அறிவித்தபோது அவரை என்னால்  ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  வல்லினத்தின் இந்த விருது அறிவிப்பு  சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளுக்கு மத்தியில் ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதம் ஒரு எழுத்தைத் தனித்துக் காட்டிவிடும்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…

பெட்டகம்

மொத்தம் நான்கு லாக்கர்கள் அந்த வேனில் இருந்தன. அதில் இரண்டு லாக்கர்கள் ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக இருந்தன. இளம் பச்சை நிறத்திலிருந்த  லாக்கர் நாலடி உயரம் இருந்தது.  சாயம்போன அலுமினிய நிறத்தில் இருந்த மற்றொன்று, மூன்று அடி உயரத்தில் மத்த பெட்டகங்களுக்கு மத்தியில் குட்டித் தம்பியாக பதுங்கி அமர்ந்திருந்தது. காணூர் பங்களாவின் இருட்டான அறைகளில்,…

இசையும் வரியும்

தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘கலிகியுண்டேகதா’ எனும் கீரவாணி ராகத்தில் அமைத்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியைச் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அன்றையச் சங்கீத வகுப்பு கீரவாணி ராகத்தால் சுவாரசியமாக இருந்தது. ஆனால் என் மனதில் நிறைய குழப்பம்; கோபம். சங்கீத வகுப்பு தொடங்கும் முன் அம்மா என்னைத் திட்டியிருந்தார். என்னைத் திட்டினால் கூட…

வீட்டு நாற்காலி

“மொதல்ல பாப்பாவ எங்க அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருறேன். இந்த வீட்ல என்கிட்ட பேச ஆளே இல்ல” என்று அவள் என்னைப் பார்க்காமல் என் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாடை பேசினாள்.  நான் முகத்தை இறுக வைத்துக்கொண்டு அலமாரியில் தேடிக்கொண்டிருந்தேன். “ஏங்க ஏதாவது பேசுவீங்களா இல்ல இனி இப்படித்தானா?” என்று கேட்டவளைத் தாண்டி ஏதும் சொல்லாமல்…

ராம மந்திரம்

“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம். “பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக்…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…