சரவாக் பழங்குடியின மக்கள் (பகுதி 2)

சரவாக் பழங்குடிகள் பல்வேறு குறுங்குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், சரவாக் பழங்குடியின் சிறுபான்மை குழு மக்களின் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டிய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்கள் மிகவும் அரிதாகவே ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் கிடைக்கும் சில தகவல்களையும் அடிப்படையாகக்…

பொந்து

1 “அந்த ஊமச்சி இன்னைக்காச்சும் வரட்டும் கேட்டுப்புடுகேன். இவனுக்க புடுக்குதான் வேணுமான்னு. எனக்க தாலியறுக்கல்லா நிலையழிஞ்சு நிக்கா. என்ன மந்திரம் போட்டாளோ, அவளுக்க பொறத்தாலையே போயிட்டான்… பலவட்டற சண்டாளி. நாசாம போவா, கட்டழிஞ்சு போவா. அவ  சீரழிவா. புழுத்துதான் சாவா… வீடு மூணு நாளா பூட்டிக் கெடக்கு… எங்க போனாங்களோ?” ராசம் ஆட்டோ ஸ்டாண்ட் இறக்கத்திலிருந்த…

மலேசிய எழுத்தாளருக்கு எபிகிராம் புனைவு நூல்களின் விருது

விருதுகள் இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு. குறிப்பாக ஒரு புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது அந்தப் புத்தகம் பரவலான வாசிப்புக்குச் செல்கிறது. எல்லா விருதுகளும் அத்தகைய முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஒரு விருது தனக்கான முக்கியத்துவத்தைத் தனது தொடர் தேர்வுகளின் மூலமே பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எபிகிராம் புனைவு நூலுக்கான பரிசும்(Epigram Books Fiction Prize),  தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் மிக…

‘வல்லினம்’ நாவல் முகாமின் முதல் நாள்

மழை நீரானது புவி மீதினில் சேற்றின் மீது பொழிவதைக் கண்டு மழை நீர் என்பது சேற்றினால் ஆனது என எண்ணம் கொள்வது அவரவர் அறியாமையினை உணர்த்திடும். சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதான எனது எண்ண ஓட்டங்களும் அதன் மீதான பார்வையும் அவ்வாறே இருந்தன எனலாம். வல்லினம் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்ட சுனில் கிருஸ்ணன் அவர்களுடனான…

‘வல்லினம்’ நாவல் முகாமின் இரண்டாவது நாள்

பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன். பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில்…

வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…

நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…

மா.ஜானகிராமன் அவர்களுக்கு வல்லினம் விருது

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வழங்க வல்லினம் குழு முடிவெடுத்துள்ளது. மா.ஜானகிராமன் கள…

“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய…

மா. ஜானகிராமன்: வரலாற்றை தேக்கி நிற்கும் சாமானியனின் அகம்

மலேசியத் தமிழர்களும் வரலாறும் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்க பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக் கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கிய குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின்…

வேதாளம்

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார். இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார் “அது இருக்கு…” என்றார் சடாட்சரம் “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.” “இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்…போவும்…