
காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக்…











