“என்னைவிட நல்லவன் யாருமில்லை,” என்றேன். இதை ஏன் நானே சொல்கிறேன்? என்னைவிட்டால் வேறு யார் என்னை நல்லவன் என்று சொல்லமுடியும்? அண்ணனைத் தவிர. எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தை மூன்று முறைக்கு மேல் கேட்டால் நானே உண்மையைச் சொல்லி விடுவேன். ஆழ்மனதில் சென்றோ அல்லது அடித்தோ கேட்க வேண்டிய அவசியமில்லை.…
ஆழம்: தட்டையான புனைவு
மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளைப் பரந்த வாசிப்புக்குக் கொண்டு செல்லவும் அவை குறித்து அரோக்கியமான திறனாய்வு போக்கை உண்டாக்கவும் மார்ச் 2 முதல் மார்ச் 3 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் உற்சாகமாக நடந்து முடிந்தது. இம்முகாமின் நான்காவது அங்கத்தில் சீ. முத்துசாமி எழுதிய ‘ஆழம்’ நாவல் குறித்து விமர்சன…
கரிப்புத் துளிகள்: நிகழ மறுக்கும் அற்புதம்
கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில் எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு…
தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்
மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார். “ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள…
இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்
கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான்,…
தேவதைகளைத் தேடும் சிறுகதைகள்
மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ‘வல்லினம் விமர்சன முகாம் – 4’ மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடைபெற்றது. மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் குறித்த வாசக கலந்துரையாடல் அது. இந்த முகாமின் கலந்துரையாடலுக்காக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர். ஒவ்வொரு…
முரண்: பழமைவாதத்தின் பரண்
வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர்…
தனித்துக் களமாடிய இலக்கிய வீரன் க.நா.சு
க. நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் புதுமாதிரியான ஆளுமை. நாவலாசிரியராக, கவிஞராக, சிறுகதையாளராகப் பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ஓங்கி ஒலித்த ஒரு விமர்சன ஆளுமையாகவே பார்க்கப்பட்டார். நாவல் என்பது தொடர்கதைகளாக, மேம்போக்கான மரபை, குடும்ப உறவுகளைப் போற்றும் கதைகளாக வந்தபோது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு கலை வடிவம் அது என்பதை உணர்ந்து நாவல்…
முனி
எதிர்வீட்டுக்கு ஒரு நாயோடு அவர்கள் குடிவந்திருந்தார்கள். முதல் நாள் பால் காய்ச்சுவதற்கே முருகேசையும் லட்சுமியையும் அழைத்தார்கள். “சொந்த வீடா கட்டிப் பால் காய்ச்சறாங்க? வாடக வீட்டுக்கு அழப்பு வேறயா? அதுக்குப் போவோணுமா?” என்று கேட்டான் முருகேசு. “சொந்த வீட்டுல இருக்கறமுன்னு பீத்தாதீங்க. வர்றவங்க அலுப்பசிலுப்பமான ஆள் கெடையாது. பெரிய மாளிக மாதிரி ஊடு இருக்குதாம். எதோ…
மூன்று குறுங்கதைகள்
1. நகக்குறி என் வக்கீல் நண்பன் பாண்டியன் நகரத்தில் குடியிருக்கிறான். அவன் தாய் தந்தையர், குடும்ப உறுப்பினர்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள். உள்ளடங்கிய கிராமம். அவர்கள் வசிக்கும் வீட்டை அடைய நல்ல போக்குவரத்து வசதி இல்லை. சாலைகள் மோசமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டுக் குறுக்கு வழியில் வயல்களின் வரப்பு வழியாக அவர்கள் இருப்பிடத்திற்குப் பாண்டியன் கூட்டிச் சென்றான்.…
சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா குறித்து நான் இதுவரை எனது எந்தச் சிறுகதையிலும் நாவலிலும் குறிப்பிட்டதில்லை. அவ்வளவு ஏன்… அனுபவங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதிய எந்தக் கட்டுரையிலும் கூட அவள் தொலைதூரமாய் நிற்கும் மங்கிய பாத்திரமாகக் கூட வெளிபட்டதில்லை. சண்முகப்பிரியாவை நான் எப்படி அவ்வளவு எளிதாக மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என் மூன்று வயது மகளை…