தமிழக மக்கள் தம் அன்றாட வாழ்வினில் பல்வேறு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கடைபிடித்துவருவது கண்கூடு. இவ்வாறான செயல்கள் கண்மூடித்தனமான மூடப்பழக்கங்கள் என்று வாதிடுவது ஒருபுறம் இருந்தாலும்; நம்பிக்கைகளும் சடங்குகளும் தற்செயலாக ஒருவருக்கு ஏற்படும் இன்பதுன்ப நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் பொருத்தி, அது மற்றவர்க்குப் பாடமாக அறிவுறுத்தப்படுவது என்றே நாம் கருதவேண்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் உளவியல் சார்ந்த செயலாகவும் அமைகின்றன. அதாவது…
ஜின்ஜாஹோ
ஜின்ஜாஹோ என்பது அவனது பெயரல்ல. கூப்பிடும் பெயர். அவனது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவனை நிற்கவைத்து உண்மையான பெயரைக் கேட்டால்கூட ஜின்ஜாஹோ என்றுதான் பதில் வரும். அடையாளக் கார்டு இல்லை. அது அவனுக்கு எந்தவிதத்திலும் தேவைப்படவில்லை. ஜின்ஜாஹோ தலைநகர் குடிவாசி அல்ல. எப்போது இங்கு வந்து சேர்ந்தான் என்றுகூட துல்லியமாய்ச் சொல்ல இயலாது. ஆனால்…
நவீன் மனோகரன் கவிதைகள்
காற்றைப்போல், நான் எழுவேன் – மாயா ஏஞ்சலோ கவிதைகள்
நீயின்றி அமையாது உலகு – 4
புத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம். பழைய நினைவுகள். மறக்க முடியாத தருணங்கள். கொடுத்ததும் கிடைத்ததும். வலிகள். இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . . நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும். எனக்கு எதையும்…
சிற்றிதழ் என்ற இலக்கிய வடிவம் இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்தும் தொடரும் – ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன், சொந்த ஊர் மதுரை. கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி, சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003- ஆம்…
வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 2
அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக்…
இலக்கிய வட்டம் : ஒரு பார்வை
பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து,…
அடையாளம்
விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது…
நகையாயுதம்
மக்கள் கலைகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை அதன் ஊடாக அமைந்திருக்கும் நகைச்சுவைக் கூறாகும். நகைச்சுவையின் வழி உலகமக்களைக் கவரவும் ஒன்றுதிரட்டவும் முடியும். நகைச்சுவை, மக்களின் மனோவியலை மென்மைப்படுத்துகிறது. மனக்கட்டுகளை அவிழ்த்து மனதை இலகுவாக்கி உணர்ச்சிகளைச் சமன்படுத்துகிறது. நகைச்சுவை என்பது ஒரு சொல்லில் இருந்தோ ஒரு அசைவில் இருந்தோகூட வெளிப்படலாம். நமக்கு எது நகைப்பை உருவாக்குகிறது என்பது…
விடுபடுதல்
மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும்…