வழித்துணை

விடியலை, அகண்ட வாசலில் நின்று வரவேற்ற கருக்கல். மென் பூச்சாய், இருளுள் படர்ந்து விரியும் ஒளி இழைகளின் ஊடாய், மெல்லச் சிவக்கும் அடிவானம். நீண்டுகிடக்கும் மென் இருளடர்ந்த சாலை. பகல்நேர வெயிலின் உக்கிரமோ ஆர்ப்பரிப்போ குழப்பமோ வாகனப் புகை நெடியோ ஜன சந்தடியோ ஏதுமில்லாமல் – ஒரு அகண்டு விரிந்த கோயில் பிரகாரத்தின் நுழைவாயிலில் தரிசனம்…

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

சீ.முத்துசாமி 1949-ஆம் ஆண்டு மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமரர்களான சீரங்கன் முத்தம்மாள் தம்பதிகளின் மூத்தமகனாகப் பிறந்தார். 1973 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எழுதி வருகிறார். இவர் படைப்புகள் மலேசியாவில் தனித்துவமான எழுத்து பாணியைக்கொண்டவை என்பதோடு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின்…

தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும்,  1930 வெ.…

க்ளிங் க்ளிங் பெண்

அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி…

சாம்ராஜ்யம்

மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும்…

நகர்வு

பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.…

பார்ச்: தரிசும் தாகமும்

கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப்…

நதியிடம் ஓர் விண்ணப்பம்

வரம்புகளையும்  குதிரைகளாக நினைத்துக்கொள்கிறோம் கஞ்சி கூழ்கூட அதன் மடியில் வைத்து உண்பதில் ஒரு பூரிப்பு. அதன் முதுகின்மேல் சேற்றில் புதைந்த கால் காவலாளிபோல் கவனிப்பாக இருக்கிறது நாலு மைல் தொலைவில் நதியென படுக்கும் நீர்த்தொட்டி எம்  வயலை தடவிச்செல்வதாக ஒரு எதிர்பார்ப்பு களைத்து வரும் நதி முன்வரிசையில் இருக்கும் வரப்பை நிறைத்துவிட்டு இரவுநேர மின்வெட்டாய் போனபின்…

மருந்தென்னும் மாயப்புள்ளி

மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம் வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை நோய்க்கூறுகளை துல்லியமாக உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்   ஒவ்வொரு புள்ளிகளிலும் ஒரு கதையை செருகச்சொல்லி தீவிரமாக வேறெதையோ தேடலானார்   உடன்பாடில்லையென்றாலும் கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்   முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக எழுதிக்கொடுத்தார் சின்ன வயதில் யாரையோ கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை அங்குச் செருகினேன் நெற்றிப் பொட்டு வலித்தது…

இரைகள்

நேற்றுத்தான், போனவனுக்கு, கல் நிறுத்தி காரியம் செய்து முடிந்திருந்தது. சீனன் கடைச் சாராயம் சல்லடைக் கண்ணாகி இதயத்தைத் துளைத்தெடுத்திருப்பது, ஆஸ்பத்திரிக்காரன், எக்ஸ்ரே எடுத்து, வெளிச்சம் போட்டுப் பார்த்துச் சொன்னபோதுதான் தெரிந்தது. சொல்லச் சொல்லக் கேட்காமல், வீட்டில் கிடந்ததையெல்லாம் எடுத்துப்போய், விற்றுக் குடித்தது, ஆஸ்பத்திரியில் ஒருமாதம் கிடத்திவைத்தது. அப்போதெல்லாம், கை ஒத்தாசைக்காக, கோயில் கூத்து மேடையில் அடைக்கலம்…

நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி

மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு,  உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும்  குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம்…