உருவ வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு தாக்கத்தால் உருவ வழிபாடு பலதரப்பட்ட வடிவங்களை எடுத்து, தற்போது 21-ஆம் நூற்றாண்டிலும் மக்களால் தீவிரமான மத வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல கடவுள் கொள்கை (polytheistic) கொண்ட நாகரிகங்களான மெசொப்பொதாமியா (Mesopotamia),…
பேரருளாளனின் கருணை எனும் கிஸா
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முன் நானும், எழுத்தாளர் அஜிதனும் மத்திய ஆந்திரா நிலத்தில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்கள் பயணத்தை முடித்து பேருந்துக்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எத்தேச்சையாகக் கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு சென்றோம். அன்று அஜிதனின் அடைந்த மனநிலை ஒரு புனைவு எழுச்சிக்கானது. அன்று என்னிடம் சூஃபி மெய்…
அசோகமித்திரனை அறிதல்
கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது. இலக்கியக்…
புதுமைப்பித்தனின் மூன்று சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்
சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி. சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…
கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை
‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…
‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி
(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…
இருள் நிரப்பி மிரட்டும் புனைவு
ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…
GTLF & வல்லினம் இலக்கிய விழா
GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர் ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை…
“கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா
அண்மையில் மேற்கொண்ட நேபாளப் பயணத்தில் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனிரா முன்னாள் குமாரி தேவி. ஏப்ரல் 2001இல் பதான் தர்பார் சதுக்கத்தின் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்குப் பத்து வயது. 2011ல் தன் பதினைந்து வயதில் பருவமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எளிய பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து…
“விளம்பர வெளிச்சம் பட்டவர்களை மட்டுமே எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளது!” மு. இளங்கோவன்
முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம்,…
வகுப்பறையில் ஒரு திமிங்கலம்
பவித்ரா தனது இடது கையை உயர்த்தி ஆங்கிலத்தில் சப்தமாகச் சொன்னாள் “வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிஷம் தானிருக்கிறது.” அதைக் கேட்டதும் மாணவர்கள் சிரித்தார்கள். அவளது கேலியைக் கவனிக்காமல் சிவானந்தம் மோபிடிக் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பறையிலிருந்த மாணவர்களில் எவரும் பாடத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் இவர்கள் உலகப் புகழ் பெற்ற நாவல் ஒன்றை அறிந்து கொள்ள…