ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை…

அழைப்பு

அந்தி சற்று தயங்கியபடியே மயங்கிக் கொண்டிருக்கிறது. பாவமன்னிப்புப் பெற ரோமன் கத்தோலிக்கர்கள் மாதா கோவிலுக்குச் செல்லும் வெள்ளிக்கிழமையின் மாலை இது. நான் அங்குச் சென்று அதைச் செய்வது தெரிந்தால் அத்தை கோபப்படுவாள். யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மட்டுமே நம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட முடியும். ஒருவேளை எனக்கு அது விடுதலை அளிக்கலாம்…

டோலிசாமி

மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளிகளால் மன்னரைப் போலவே மதிக்கப்பட்டார் ராமசாமி. பெயரே ராமசாமியாக அமைந்ததால் இன்னொரு சாமியை இணைத்து ‘ராமசாமி சாமி’ எனக் கூப்பிட சாமிகளின் வாய்க்கு அவ்வளவு பொறுமை இல்லை. தனியாகப் பட்டப் பெயரையும் அவருக்குச் சூட்டுவதில் எந்தச் சாமியும் மும்முறமாக இதுவரை முயன்றதில்லை. மூக்கு நீளமாக இருந்ததால் ஒருவருக்கு ‘மூக்கு…

தேவனின் நாயனம்

சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது. “டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?” பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை…

கோணம்

இரண்டு நாளில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவரைப் புகைப்படம் எடுக்கலாம் எனும் திட்டத்தைக் கவின்தான் சொன்னான். கோலாலம்பூரின் மையத்தில் இருந்த மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையத்தின் முன்னிருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு மொத்த உடலையும் பரப்பி மல்லாந்து படுத்திருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனம் பிறழ்ந்தவர்கள் என எல்லாக் காட்சிகளுமே எங்கோ…

தாயே! வாழ்வு இத்தனை அற்பமானது ஏனோ?

ஜெயமோகன் சாருடன் மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்த போது ஒரு மாலையில் கவி நாவலைப் பற்றிச் சொன்னார். வங்க எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் எழுதிய முதல் நாவல் கவி. 1941ல் வெளிவந்தது. இருநூற்றைம்பது பக்கம் கொண்ட சிறிய நாவல். ஜெயமோகன் அந்நாவல் பற்றி எழுதிய ‘உமாகாளி’ கட்டுரை பற்றியும் குறிப்பிட்டார். அன்றிரவு உமாகாளி கட்டுரையைப் படித்ததும் உடனே…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா 2023

வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி.…

உலகத் தமிழ்க் களஞ்சியம்: காகித விரயம்

உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக்  கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது.…

Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

விக்கி இம்பேக்ட் ஆய்வு முடிவுகள் மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக்…

மோகப்புயல்

சின்னச்சாமி அண்ணா வண்டியை நிறுத்திவிட்டு தூக்கம் தொலைத்த முகத்தோடு சோர்வாக வந்தார். “வாண்ணா” என்று ஸ்டூலை எடுத்துக் கொடுத்தேன். “வேண்டாம்” என்று சொல்லி விட்டு கடைப்பலகையின் வலது ஓரம் அமர்ந்தார். முதுகுப்பக்கம் சட்டை வேர்வையில் ஒட்டியிருந்தது. நான் கடையைவிட்டு இறங்கினேன். தலை குனிந்தபடி தரையில் ஓரிடத்தையே பார்த்தபடி இருந்தார். நேற்று சாயுங்காலம் வந்து நின்றவரை “உக்காருண்ணா”…

சிங்கப்பூரின் மூன்று நூல்கள்

ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தடத்தை இரு வழிகளில் பார்க்கலாம். ஒன்று இலக்கியங்களைப் படைத்தவர்கள். மற்றது இலக்கிய ஆக்கங்கள். சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் 1872ல் வெளிவந்த முகம்மது அப்துல்காதிறுப்புப் புலவர் எழுதிய முனாஜாத்து திரட்டு, 1887களில் யாழ்ப்பாணத்து சதாசிவ பண்டிதர் எழுதி வெளியிட்ட வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை…