புறப்பாடு

அபத்தக் கனவுகளின் மாய உலகிலிருந்து தப்பி விழிப்புத் தட்டிய போது டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் காலை 11.15 என்று காட்டியது. கண்ணாடி அணியாத கண்களினூடே அதையே சற்று நேரம் மங்கலான காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் எப்போதும் அவனைத் தாக்கும் அபாரமான உத்வேகம் அன்றும் தாக்கியது. படுத்துக் கொண்டே பல எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான்.…

பெருந்தேவி கவிதைகள்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெரிக்கப்போவதாக உன் கைகளும் கால்களுமே உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி உன்னைக் கீறி ரத்த விளாறாக்கிவிடும் போல உன் கைகளை ஒன்றோடொன்று இறுக்கமாகக் கோர்த்தபடி…

ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்

சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் அவர்களின் ‘ஓந்தி’ சிறுகதைத் தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தாரால்  2019ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் விரிவான முன்னுரையைக் கொண்டிருக்கிற இத்தொகுப்பு ‘சிங்கப்பூர் இலக்கிய  விருது 2020’ தகுதிச் சுற்றில் தேர்வாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்கள் தேசிய…

அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர்…

இரண்டொழிய இன்னொன்று

அது 1998ஆம் ஆண்டின் பிற்பகுதி. தமிழ்நாட்டில் ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை முடித்திருந்தேன். பட்டப் படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். ஆனால் குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காமல் போனது. தேவையான அளவைக்காட்டிலும் சுமார் இரண்டு விழுக்காடு என்னுடைய மதிப்பெண் குறைவு. அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பிரிவில் சேரலாம். ஆனால் விருப்பமில்லை. அதனாலென்ன?…

நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின்…

வல்லினம்: இளம் எழுத்தாளர் விருது

முன்னுரை கடந்த பல ஆண்டுகளாக வல்லினம் இலக்கிய குழு, மலேசிய இளஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்க்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. கோட்பாட்டு இலக்கிய பட்டறைகள், இலக்கிய முகாம்கள், கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளின் வழி மலேசிய இளைய சமூகத்திற்கு தீவிர இலக்கிய புரிதலை உருவாக்கவும் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

விமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து

ஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக…

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்

மலாயாவில் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர்) மொழிசார் வேர்களை ஆராயும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் இரு விடயங்கள்; (1) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை; (2) மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை நூலகம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவும் அதன் நூலகமும் உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக…

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என…

வெள்ளிக் காசு

மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும்…