அனுபவ பாத்தியம்

டாக்ஸி, மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி, பத்துகிலோ மீட்டர் தூரம் தஞ்சாவூர் ரோட்டில் போனதும், புகளூர் கோயில் கோபுரம் தெரிந்தது. அருண் ஆவலுடன் கண்ணாடியை இறக்கிவிட்டு எட்டிப் பார்த்தான். “நம்ம கோயில் கோபுரம்தானே?” என்று கேட்டான். முன்பக்கம் உட்கார்ந்திருந்த அருணின் தந்தை ராஜகோபால் “ஆமாம்” என்றார். இன்னும் ஐந்துகிலோ மீட்டர் ஓடி, இடதுபுறம் பாலத்தடியில் திரும்பி,…

ஆதியோசை

என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது…

துண்டு நிலம்

01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக…

வேணு வேட்ராயன் கவிதைகள்

2020இன் குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் கவிதைகள் இவை. தொழில்முறை மருத்துவரான இவர் தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். இவரது ‘அலகில் அலகு’ எனும் கவிதை தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்துள்ளது. வேணு வேட்ராயன் அவர்களுக்கு வல்லினத்தின் வாழ்த்துகள்.   (1) ஒடுங்குதல் நிகழ்கிறது. ஓவ்வொரு சாளரமாய் தன்னை சாத்திக்கொள்கிறது.…

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

1 நீ சொன்னாய் அம்மா “உன் சோகங்களை யாரிடமும் சொல்லாதே துயர முகம் பார்த்துப் பேச தோன்றாது எவருக்கும்…” அம்மா… உண்மையிலேயே உற்சாகத்தில் இருக்கையில் மனம் உள்ளொடுங்கிகொள்கிறது நகைச்சுவை உணர்வு தடுத்துக்கொள்கிறது திறமையோ மிரட்டுகிறது கட்டுப்பாடுகள் பிளவுபடுகிறது ஆனால் சோகம்… சோகம்தான் நமக்கு நம்மை வெளிப்படுத்தி காட்டுகிறது மூலம்: Rachel Naomi Remen 2. அந்த…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

அந்திமழை சிறுகதை சிறப்பிதழ்: ஒரு வாசக பார்வை

கொரோனா காலத்திலும் எந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுமின்றி இலக்கிய வாசகர்ளுக்கான பயணங்கள் மட்டும் இன்னும் திறந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நிலத்தில், புதிய மனிதர்களோடு, பல்வேறு அனுபவங்களை, கண்டடைதல்களை வெவ்வேறு திசைகளில் இருந்து இலக்கியங்கள் வழங்குகின்றன. இலக்கிய வாசகர்கள் பூட்டிய அறைக்குள்ளிருந்தே உலகை தரிசிக்கக்கூடியவர்கள். அப்படி என் வாசிப்பை அர்த்தப்படுத்திய படைப்புகளில் மே மாத அந்திமழை…

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட…

யாவரும்.கோம்: கொரோனா காலத்துக் கதைகள்

உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது கொரோனா. நச்சில் `தாக்குண்டப் பெரும்பான்மையான நாடுகளில் இயல்நிலை முடக்கமோ, ஊரடங்கு சட்டமோ அமலில் இருக்கும் காலம். ஆறுதலுக்கு எங்கே போவது என எண்ணியபோதுதான், ‘யாவரும்.காமில்’ கொரோனா காலத்துக் கதைகள் என்ற விவரத்துணுக்கின் கீழ் தொடர்ச்சியாக 44 சிறுகதைகள் நாளுக்கு ஒன்றாய் பதிவேற்றம் காணுவதை அறிந்தேன். அவை ஆறுதலாக இருந்தனவா என்பதையும் தாண்டி,…

புனைவுகளில் புரண்டோடும் திருப்பங்கள்

சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் வடிவம். மரபிலக்கியம் சமூகத்தில் உள்ள நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் பற்றியே வலியுறுத்திக் கூறும். புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணியமையால் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சிறுகதையின் மூலமாகச் சொல்வர். புத்திலக்கியத்தின் சிறுகதை ஒரு தருணத்தையே கதையாக மாற்றும் வடிவம். கதை நிகழும் சூழலிலிருந்தே கற்பனையை வளர்த்துக் கொண்டு…

இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

                                இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது வல்லினம் இலக்கியக் குழு  மூத்தப் படைப்பாளிகளை கௌரவிக்கும் பொருட்டும் அவர்கள் படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும் வல்லினம் விருதை 2015இல் தொடங்கியது. இவ்வருடம்  இளம் எழுத்தாளர்களுக்கான ‘வல்லினம் விருது’ ஒன்றை அறிமுகம்  செய்ய உள்ளது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் நினைவு கோப்பையும் இந்த தேர்ந்தெடுக்கப்படும் இளம்…