மலேசிய நாவல்கள்: ஒரு தீவிர வாசகனின் மறைக்கப்பட்ட குரல்

கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

அடிமை

மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார்த்தேன். ஐம்பது டாலர் சரியாக இருந்தது.நான் மூங்கில் கேட் வழியாக நுழைந்து ஆர்கிட் தோட்டத்துக்குச் சென்றேன். செதுக்கிய கல் தட்டைகளை புதைத்து பாதை அமைக்கப்பட்டிருந்தது. நான் நடந்து நடந்து சலித்த பாதைதான்.  கடந்த இரண்டு மாதங்களிலேயே மூன்று முறை மேடத்தை சந்தித்து பேச வந்துவிட்டேன். ஆனால் எதுவும் நான் நினைத்தது போல அமையவில்லை.…

முலைகள்

சிவப்பு நிற பிளவுசும் அதே நிறத்தில் ஸ்கார்ட்டும் அணிந்திருந்த அந்தச் சீனப்பெண்ணைச் சற்று முன்புதான் காண்டினில் பார்த்தேன். அந்த மருத்துவமனையில் அவளது உடையின் வண்ணம் பொருந்தாமல் துருத்தி நின்றது. புத்தகம் ஒன்றைப் படித்தபடி பசியாறிக்கொண்டிருந்தாள். இறுக்கமான பிளவுசில் அவள் முலைகள் பருத்து, மதர்த்து நிற்கும் தோற்றத்தை தந்தன. பிளவுசின் முதல் பொத்தான் திறந்துக் கிடந்தது. வேண்டுமென்றே…

மனசை ஆய்ந்த மனசிலாயோ!

பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை  எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு…

உச்சை: தருணங்களை வியப்பாக்கும் கதைகள்

இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன.  நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு…

சுடரேற்றம்

திருப்பட்டூருக்கான அரசுபேருந்து துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து விடியல் துடிகொள்ளத் தொடங்கிய நேரத்தில் கிளம்பியது. வழியெங்கும் கடைவாசல்களில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். “வயசுப்பிள்ளை வேகமா பஸ்ஸீல ஏறி எடம்பிடிக்குதான்னு பாரு,” “இதுக்குதான் வரலேன்னு சொன்னேன்…” என்ற சுஜி தன் பின்னால் நின்றவரின் கைகளில் மோதிய துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள். “ஆமா…வரலேன்னா ஆச்சா. காரிய சாமார்த்தியமில்லாம,” “வியாழக்கிழமைன்னா இந்தபஸ்ஸீல கூட்டமாதான் இருக்கும்……

உதிர்ந்த இலை

தடக்…. தடக்… தடக்…  இரயில் வண்டியின் ஒட்டுமொத்த சப்தம் வேறொன்றாக இருப்பினும், மூன்றாம் வகுப்புக்கென்று சில பிரத்யேக சப்தங்கள் உண்டு. அதன் நெரிசலும் பிதுங்கலும் கொதிக்கும் மரப்பலகை இருக்கைகளும் ரயிலின் போக்கோடு இணைந்துக் கொண்டாலும் சில சமயம் ரயிலின் சத்தமும் சில நேரம் ஆட்களின் சத்தமும் ஒன்றையொன்று விஞ்ச முனைந்தன. நானும் அம்மாதிரியான முயற்சியில்தான் ஈடுப்பட்டுருக்கிறேன்…

கூலி தரும்

திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும், சன்னமாக முனகிக்கொள்வதும் எனக்கு சுமார் பத்துவயதிலிருந்தே வழக்கமாக இருந்தது. ஆனால் இசையை முறையாகக் கற்கவேண்டும் என்றோ இசைக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்றோ தோன்றியதில்லை. பின்னாளில் ஶ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்றபோது கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஏன் குறிப்பாக கிடாரைத் தேர்வுசெய்தேன் என்பதற்கு இன்றுவரை காரணம் கிடைக்கவில்லை. …

வல்லினம் சிறுகதை சிறப்பிதழ்

தமிழில் சிறுகதைகள் ஆரம்பத்தில் இருந்தே உலகத்தரத்தை ஒட்டிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில நாவல்களைப் பார்த்து எழும் பிரமிப்பு, சிறுகதைகளைப் பார்த்து எழாததன் காரணம் நாம் தமிழில் அதற்கு இணையான பலவற்றைப் படித்ததன் காரணமாக இருக்கக்கூடும். இணைய இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்கள், தமிழ் சிறுகதைகளுக்கு மேலும் ஒரு வலுவான நடைமேடையும், அதிக வாசகர்களை அவர்கள் இருக்கும்…

வல்லினம் செயலி

இலக்கிய இணைய இதழ்களில் வல்லினம் முதன் முறையாகச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசகர்கள் இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். வல்லினத்தின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும். தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

எண்ணும்பொழுது

“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.

யானைக் கதை

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக…

ஆறுதல்

களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான்.…

நிசப்தத்தின் அருகில்

“அவள் ஒரு மோகினி!” என்று மெழுகு தாளில் மை தொட்டு எழுதியிருந்த கையெழுத்துப் பிரதியின் முதல் வரியைப் படித்த பின்னர்தான் ராவ் மனதுள் துணுக்குறல் பிறந்தது. அந்த பங்களாவின் மேல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஹென்றியின் அறையிலுள்ள தனிப்பட்ட நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை அவர் தேடிக் கண்டடைந்திருந்தார். நீளமான தாள்களை இரண்டாக வெட்டி எழுதி,…