கே. எஸ். மணியம்: அடையாளம் காணப்படாத ஆளுமை

“நான் யார்?”, “எங்கிருந்து வந்தேன்?”, “இனி நான் செல்லபோகும் இடம் எது?” போன்ற அடிப்படையான ஆனால் அர்த்தம் பொதிந்த இக்கேள்விகளே மனிதன் தன்னைக் குறித்த அடையாளத்தை நிர்மாணித்துக்கொள்ளவும் தான் யாரெனத் தெளிவாக மீட்டுணரவும் செய்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் சுய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் ஒருவர் இனம், மதம், தனது சமூக-பொருளாதார நிலை, அரசியல், குறைந்தபட்சம்…

வாட்டர்: கனவுகளை மூழ்கடிக்கும் புண்ணிய நதி

இந்திய சமூகத்தில் விதவைகள் எந்த நிலைமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதனையும், அந்த அவலம்  வேத சாஸ்திரத்தைக் கொண்டு சமூகத்தின் மத்தியில் எவ்வாறு ஆழமான  நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறது ‘வாட்டர்’ திரைப்படம். சர்ச்சைக்குரிய படைப்பாளி என்று கூறப்படும் இந்தோ-கன்னடியரான இயக்குனர் தீபா மேத்தாவின் இயற்கை கூறுகள் வரிசை கொண்ட (element trilogy) மூன்றாவது படமாக ‘வாட்டர்’…

பட்டு: புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமாகிறது

காதலுக்கு ரசாயன மாற்றங்களைக் காரணமாக சொன்னாலும், அத்தகைய ரசாயன மாற்றம் ஏற்படும் நேரம் காலமெல்லாம் நம் கைவசம் இருப்பதில்லை. ‘இருபது வயதில் காதல் வராவிட்டாலும் தப்பு; அறுபது வயதில் காதல் வந்தாலும் தப்பு’ என்று சில பேச்சாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த வசனங்களுக்கு கைதட்டல்களின் சத்தம்தான் இருக்குமே தவிர வாழ்வின் உண்மையை அவை நெருங்குவதே இல்லை.…

வரலாற்றிலிருந்து வாக்கு மூலங்கள்

நினைவுகளைப் பதிவு செய்வது ஒரு கலை. இக்கலை வடிவத்தை ‘நினைவுக்குறிப்பு’ (memoir) என்கிறோம். இது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இலக்கியத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று புனைவு இலக்கியம். மற்றொன்று புனைவில்லா (அல்புனைவு) இலக்கியம். சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என கற்பனை கலந்த அனைத்தும் புனைவுகள் வகையைச் சார்ந்தது. சுயசரிதை, நாள்குறிப்பு, நினைவுக்குறிப்பு…

‘கலைக்கு வயதாவதில்லை’ – ஆர்தர் பொர்மன்

சுற்றிலும் செடி கொடிகள், வானுயர வளர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை. வீடோ முற்றிலும் மூங்கில்களால் ஆனது. இயற்கைதான் இங்கே ஜீவ நாதம். கூச்சிங் நகரத்திலிருந்து ஒரு மணி நேர காரில் பயணம். சரவாக் என்றாலே நீண்ட வீடுகளின் கலாச்சாரம், இசை, நடனம், உணவு, வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்ட சூழல். அது…

காலம் தந்த கருப்பினக் கவிதைகள்

“மனித இனம் தோன்றிப் பெருக ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அடிமைப்படுத்த விழையும் போராட்டமும், அடிமைப்படுவதிலிருந்து விடுபட விழையும் போராட்டமும் ஒரு சேர நடந்துகொண்டுதான் இருக்கிறது. மனித இனம் இருக்கும்வரை இப்போராட்டமும் இருக்கும்” – எழுத்தாளர் இமையம் ஆப்பிரிக்கக் கவிதைகள் லூசி தெர்ரி (1730-1821)–இல் இருந்து தொடங்குகிறது. ஆனாலும் பிலிஸ் வீட்லீ (1753-1784) என்பவர் எழுதிய “Poems on…

வல்லினம் கலை இலக்கிய விழா 7

வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்:  1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன் அவர்களின் பேனாவிலிருந்து…

தமிழ் நாவலுலகில் நிகழ்ந்த அதிசயம் – ‘எங் கதெ’

அபூர்வமாகத்தான் நம்மை ஒரு படைப்பு நிலைகுலையவைக்கும். அப்படி அண்மையில் என்னை ஆட்டிப்படைத்த ஒரு படைப்பு இமையம் எழுதிய – ‘எங் கதெ’ நாவல். அது ஓயாமல் என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான  “கமலா” என்கிற 28 வயது கணவனை இழந்தப் பெண்ணுக்கும் படித்துவிட்டு வேலை தேடும்  விநாயகம் என்பவருக்குமிடையே ஏற்படும் அன்பு, அதனால் இருவருக்குமிடையே…

எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம்

அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது…

தூக்கம் பறித்த ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்

சிறிய தோட்டா ‘கடைசி மாவில் ஒரு குட்டி தோசை குழந்தைக்கென தைத்த மிஞ்சிய சிறு துணியின் குட்டி கீழாடை அவளுக்கு உள்நாட்டுப் போரின் போது அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில் மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா குழந்தையின் உடலுக்கென..’ கவிஞர் நரன் எனக்கு அறிமுகமானது இந்தக் கவிதையின் வழிதான். போரில் எது வேண்டுமானாலும்…

அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

பத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது. இப்படி வளர்ந்த என் எழுத்து…

இல்லாத திசைகள் 6 – நெருப்பு ஆசிரியர்

நெருப்பு ஆசிரியர் பொறுப்பெடுத்த பின் அப்பத்திரிக்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிய அறைக்குள் இருந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தைப் பக்கத்தில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். பெரிய இடத்தில் வசதியாக இருந்தது. அதுதான் நெருப்பு ஆசிரியரின் குணம். யாரோடும் ஒட்டாமல் தனித்தீவு அமைக்கும் குணம். மலேசிய நண்பன்  நாளிதழில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நெருப்பு ஆசிரியர்.…

இருள் எனும் நிழல்

தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி…