வல்லினம் கலை இலக்கிய விழா 5

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) நிகழ்வை தொடர்ந்து செப்டம்பர்  15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 5-வது கலை இலக்கிய விழா தொடங்கியது. வல்லினத்தின் படைப்பாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் இம்முறை கலை இலக்கிய விழாவில் பங்கு கொண்டனர். நிகழ்வின் முதல் அங்கமாக நவீன்…

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை)

வல்லினம் வகுப்புகள் 4 (நவீனத்துவம் – பின்நவீனத்துவம் பட்டறை) மற்றும் 5-வது கலை இலக்கிய விழாவிற்கான வேலைகள் இம்முறை கூடுதல் உற்சாகத்தையும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் தந்திருந்தது. வல்லினம் குழுவின் மிக முக்கிய தொடர் நிகழ்வான இலக்கிய வகுப்போடு இம்முறை 5-வது கலை இலக்கிய விழாவும் சேர்ந்து கொண்டது கூடுதல் கனத்தைத் தந்திருந்தது. வழக்கம்போல பட்டறை…

காசியில் நான்கு நாட்கள்

காசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை…

மை ஸ்கீல் அறவாரியம் (MySkills Foundation) மற்றும் வல்லினம் ஏற்பாட்டில் மலேசியாவில் முதல் நவீன வீதி நாடகம்!

எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல…

மாலதி மைத்ரி பதில்கள் – பகுதி 2

பகுதி  2 கேள்வி : பெரும்பாலும் மலேசிய இலக்கியத்தைத் தமிழக அல்லது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் கவனிப்பதில்லை என்ற கூற்று உள்ளது. நீங்கள் எப்படி? – மகேந்திரன், பினாங்கு பதில் : இக்கேள்வி மிக முக்கியமானது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் எதிர்காலச் செயல்பாடுகளைக் குறித்து  சிந்திக்கத் தூண்டும் கேள்வி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் மலேசிய இலக்கியவாதிகளின்; கட்டுரைகள், சிறுகதைகள்…

யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்

வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வாக நடந்த எழுத்தாளர் ‘யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்’ எனும் நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வாசகர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.  தொடக்க அங்கமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் யவனிகா அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த…

குவர்னிகா: டாக்டர் சண்முகசிவா நேர்க்காணல் குறித்து…

குவர்னிகா தொகுப்பில் உள்ள டாக்டர் சண்முகசிவாவின் “மனித விடுதலை போல் கடவுள் விடுதலையும் முக்கியமான ஒன்று” நேர்காணல் குறித்து நீங்கள் பேச வேண்டும் என நவீன் கேட்டபோது சிறு மௌனத்தை மட்டுமே என்னால் பதிலாக தர முடிந்தது. நீங்கள் அவரது நேர்காணல் குறித்து எதுவும் பேசலாம் என மேலதிகமாக நவீன் சொன்ன பிறகு பேசுவதற்கான வார்த்தைகளுக்காக…

குவர்னிகா: மலேசியக் கவிதைகள் ஒரு பார்வை

தமிழ் இலக்கியத்தின் தொன்மத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக உடனே அதன் நீண்ட நெடிய 2000 வருடக் கவிதை தொடர்பை அடையாளப்படுத்துவது தமிழ் இலக்கியச் சூழலின் கட்டாய / அபாயப் பணியாகிவிட்டது. ஆயிரம்கால பெருமையைப் பேசியே கவிதை நகர்ச்சியைச் சாகடித்துவிட்டோமோ என்றுகூட தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து சமக்காலக் கவிதைகளைப் பற்றி பேசத் துவங்கும் ஒருவன் தனது விமர்சனத்தைக்…

குவர்னிகா: மலேசியாவின் மூன்று சிறுகதைகள் ஒரு பார்வை!

உலகில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மொத்த குரலையும் ஒலிக்கச்செய்யும் இலக்கிய முயற்சி குவர்னிக்கா இலக்கியச் சந்திப்பின் வழி நீண்ட காலமாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி இந்த இலக்கிய முயற்சி    41-வது முறையாக மீண்டும் யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு தன் சந்திப்பு தொடரை நிகழ்த்தியது. அச்சந்திப்பில் வெளியீடு கண்ட குவர்னிக்கா இலக்கிய…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை…

மலேசியாவில் மலாய் சிறுகதை இலக்கியத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆரம்பக்கால மலாய் இலக்கிய போக்கினைக் கண்ணுறுவது முக்கியமாகும். மலேசியாவின் சுதந்திரத்திற்கும் ஒரு வகையில் மலேசிய மலாய் இலக்கியம் பங்கையாற்றியிருக்கிறது எனில் மிகையில்லை. மலேசியாவில் தேசிய இலக்கியம் என்பதும் மலாய் இலக்கியம் என்பதும் ஒன்றுதான் என்ற நிலை இருந்துதான் வருகிறது. சீனமொழியும், தமிழ்மொழியும் மலேசியாவில் வழக்கத்தில் உள்ள மொழியாக…

உரிமை படி (Royalty): ஒரு விவாதம்

கேள்வி: தமிழ் நூல்கள் குறைவாக விற்பனையாகும் சூழலில் ராயல்டி கேட்பது முறையா? கே.பாலமுருகன் : மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினர்தானே, பிறகு ஏன் உரிமையைப் பற்றி பேச வேண்டும் அதனைக் கேட்க வேண்டும். வாருங்கள் அனைவரும் காலம் முழுக்க அடிமைகளாகவே இருக்கலாமா? விற்பனையின் அளவு பொருத்தோ எண்ணிக்கையைப் பொருத்தோ உரிமைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. எப்படியிருப்பினும் ராயல்டி என்பது தனி…

நேர்காணலும் நேர்மையின்மையும்

அண்மைய காலமாக வல்லினம் மற்றும் இளம் எழுத்தாளர்கள் பலர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிவருவது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இதன் அடிப்படையில் அதன் தலைவர் பெ.ராஜேந்திரன் ‘நம்நாடு’ தினசரிக்கு உண்மைகளை மறைக்கும் வகையில் ஒரு நேர்காணல் வழங்கினார். அதற்கான எதிர்வினையாக வல்லினம் வழங்கிய மறுப்பு கட்டுரை. இயக்குநர் சேரனும் ஒரு லட்சம் ரூபாயும் (31.3.2012)…

50ஆம் ஆண்டு பொன்விழா காணும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வீழ்ச்சிக்கான காரணம்: ஓர் ஆய்வுக்கு முன்பான ஆயத்தங்கள்!

கட்டுரைக்குச் செல்லும் முன் வல்லினம் இணையதளத்தில் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக வெளிவந்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள். பணம், புகழ், சொத்து, சுகம் அனைத்திலும் உயர்ந்து நிர்க்கும் வைரமுத்து அவர்களின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நூலை இங்கே அறிமுகம் செய்துவைத்து இலட்சக் கணக்கில் பணம் திரட்டிக் கொடுத்தது அவசியம்தானா? – இலக்கியக்குரிசில்  மா.இராமையா மலேசிய தமிழ்…

நினைவு நல்லது வேண்டும் சிறுகதை தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும்.…

புறப்பாட்டின் துயரப்பாடு

பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டது பணியிடத்தில் விடுப்பு சொல்லியாகிவிட்டது துணிமணி இத்யாதிகளையும் எடுத்துவைத்தாயிற்று புறப்படும் பொழுதில் எந்த முகாந்தரமுமின்றி மனதைப் பிசைகிறது ஒருசோகம்   ஒரு பிரயாணத்திற்குத் தயாராகிப் புறப்படும் வேளைகளில் பெருஞ்சோகச்சுமை நெஞ்சை அழுத்துகிறது புறப்படும் ஊர் சொந்த ஊராகவே இருந்ததில்லை பெரும்பாலும் சேரும் ஊர்கூட தூரதேசப் பிரதேசத்தில் இல்லை இரவு கிளம்பினால் விடியலில் அடைந்துவிடும்…

கோடைகால மதியப் பொழுதுகள்

மதியம் உறங்கி எழுந்தால் பெரும்பாரத்தொடு  மனம் கனத்துவிடுகிறது.   விடுமுறை நாளில் வெறிச்சோடி நீண்டுகிடக்கிறது வீதி. கதவுஜன்னல் சாத்திய வீடு படுத்துக்கிடக்கும் தெருநாய் நகராது நிற்கும் வாகனம் என அசைவற்றது எதைக்கண்டாலும் கூடிவிடுகிறது விசனம்.   கிளைகள் அசையக் குலுங்குகிறது பட்டுபோய்விட்ட மரம். ஏதொயிரு கிளைகள் நடுவே குடியிருந்ததற்கு சாட்சியாய் கட்டிய கூட்டை விட்டுப்போன பறவை…

போர்வைக்குள்

மேற்புறத்து மேடுபள்ளங்களைக் கொண்டு யூகிக்கமுடியவில்லை. கட்டில்மீது குவிந்துகிடக்கும் போர்வைக்குள் பதுங்கியிருக்கிறது ஏதோ ஒரு ஜந்து.   விளிம்புதாண்டியும் நீண்டிருக்கின்றன கால்கள். நகங்களில்லை. போர்வையின் நுனிபற்றி உயர்த்திப் பிடிக்கிறேன். கால்களை உள்ளிழுத்துக்கொள்கிறது.   கரம் நுழைத்துத் துழாவியும் அகப்படவில்லை.கடிக்கவுமில்லை. இன்னமும் உயர்த்துகிறேன். உள்ளோடி ஒளிந்துகொள்கிறது.   சரிதான்.வெளிச்சம்கண்டு பயப்படுகிறது போலும். விளக்கை அணைத்தால் வெளிவரக்கூடும்.   சுவிட்சைத்…

கலை இலக்கிய விழாவை தொடர்ந்து செப்டம்பர் முழுக்க வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வுகள்

வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது. வல்லினம் பட்டறை ‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய  விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ்…

இழப்பு

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர்  உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன்.  அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில்…