
கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…