
குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…















