சிறிய காடும் சில மனிதர்களும்

மொத்தம் 18 தனித் தனி கட்டுரைகளைக் கொண்ட சிறுகாட்டுச் சுனை அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையை, நாமறியாத பல புதிய வண்ணங்களைக் காட்டக்கூடிய தொகுப்பு. மிக எளிமையான மொழி நடையில்  சிரமமற்ற வாசிப்பை வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகு நிலா. இக்கட்டுரைகள் வெறும் தகவல் கோர்வைகளாக அல்லாமல், உயிர்ப்பான அனுபவப் பின்னணியிலிருந்து யதார்த்தமான பாணியில்  எந்த…

த்வந்தம்

நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன்.

நீராலானது

“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு.  அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.

பாடிக் கொண்டே இருக்கும் பறவைகள்

நீ பாடுவதை நிறுத்துவதில்லைவலியைத் துளைத்து வெளியேறும்சிவப்புநிற நாகம்நீ பாடி முடிக்கையில்சூரியனில் இருக்கும் அனார் கவிதை ஒரு பறவை. அது இழப்பு ஏற்பு, வலி, பிரிவு, துக்கம், மரணம், பிறப்பு, மலர்தல், மொக்குதல், மடிதல்  இன்னும் பலவற்றையும் பல வகைகளிலும் பாடிக்கொண்டே இருக்கும். இந்த நொடியும் உலகின் ஏதேனும் ஒரு இடத்தில் பாடல் ஒலிக்கும்.  இவ்வுலகம் ஓய்ந்து…

சிறுகதை எழுதும் கலை

வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…

சிங்கப்பூர் சிறப்பிதழ்

ஜூலை வல்லினம் இதழை சிங்கப்பூர் சிறப்பிதழாக தயார் செய்கிறோம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதழுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க புனைவுகள் குறித்து பிற நாட்டு படைப்பாளிகளும் கட்டுரைகள் அனுப்பலாம். படைப்புகளை 20.6.2021 க்குள் valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

உலக நிலக்காட்சியின் ஊடே அ.முத்துலிங்கத்தின் கதைகள்

1 அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்கும்போது பறவைகளின் ஞாபகம் வருகிறது. வலசைபோகும் பறவைகளில் அந்தந்தத் தேசத்து நீர்த்தேக்கங்களில் அமர்ந்து காதல் வாழ்வைத் தொடங்குகின்றன. அந்த நிலத்து சிறு குச்சிகளை, பட்டைகளை எடுத்துக் கூடு பின்னி, அந்த நிலத்துத் தானியங்களை உண்டு, அந்த நிலத்து வெய்யிலையும் குளிரையும் நீரையும் குடித்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அருகிருந்து மிக விழிப்புடன்…

மலேசிய நவீன கவிஞர்கள் (4) : பூங்குழலி வீரன் கவிதைகள்

எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி ஒருவரிடம் வந்து ‘பழைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் கடவுளைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் கதைகளில் படிக்கிறோம். இப்போது ஏன் கடவுள் யாருக்கும் தெரிவதில்லை,யாருடனும் பேசுவதில்லை’ என்றான். அதற்கவர் ‘ஏனென்றால் இப்போது யாராலும் அவ்வளவு தாழ குனிய முடிவதில்லை. அதனால் தான்’ என்று பதிலளித்தார். கடவுளைக் காணமுடியுமோ…

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது…

பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

இயற்கை எழில் நிறைந்த மலேசியாவில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது. சூழலியல் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளின் தேடல்கள் அதனால் மனிதனுக்கான நன்மை, தீமைகள், அல்லது நாட்டின் பொருளாதரத்திற்கு அதன் பங்கு என்ற நிலையிலேயே இருக்கும். இயற்கைக்கும் அது சார்ந்த உயிரினங்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவற்றைக் கலைவதற்கான வழிகள் குறித்தும்…

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

“அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும்…

மோட்சம்

“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது. மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது.…

எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது. காவி…

பிளாச்சான்

நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த  பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும். …

பேய்ச்சி: பிரளயமும், ஆனந்த சயனமும்

நமது புராணங்களில்  வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும்  செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை.  நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின்  விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா  உருவக வெளி அது. அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு…

அருவாச்சாமி

ஆங்கில ‘U’ எழுத்தை தலைகீழாக நிறுத்திவைத்தது போலிருந்தது அந்தக் கோவில். சிறு மாடம் போன்ற அமைப்பு. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருந்தது. அதன் நடுமையத்தில் அருவாச்சாமி பளபளப்போடு குத்தி நின்றிருந்தது. மூக்கில் எலுமிச்சம் பழம் அழுத்தி செருகப்பட்டிருந்தது. நடுமையத்தில் விபூதிப்பட்டை, அதன் நடுவில் குங்கும தீற்றல். வளைவான தலைப்பகுதியில் ஒருமுழ கதம்ப மாலை தொங்கிக்கொண்டிருந்தது. கீழே ஒரு…

இந்திர தேசம்

இரவு பத்து மணிக்கு நட்சத்திர விடுதியை விட்டு வெளியே வருபவனின் தனிமையை, பாங்காக்கின் டாக்ஸி ஓட்டுனர்கள் சரியாக இனம் கண்டுக்கொள்கிறார்கள். காரில் ஏறியவுடன் செல்லுமிடம் பற்றி எந்த வினாவுமின்றி வண்டியை சுக்கும்வித் சாலையில் இறக்கினார் அந்த ஓட்டுனர். சிறிது தூரம் சென்றவுடன், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினார். பிறகு, பின்பக்கம் திரும்பி என்னை பார்த்து சிரித்தார்.…