
நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம். இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…