
திருப்பட்டூருக்கான அரசுபேருந்து துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து விடியல் துடிகொள்ளத் தொடங்கிய நேரத்தில் கிளம்பியது. வழியெங்கும் கடைவாசல்களில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். “வயசுப்பிள்ளை வேகமா பஸ்ஸீல ஏறி எடம்பிடிக்குதான்னு பாரு,” “இதுக்குதான் வரலேன்னு சொன்னேன்…” என்ற சுஜி தன் பின்னால் நின்றவரின் கைகளில் மோதிய துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள். “ஆமா…வரலேன்னா ஆச்சா. காரிய சாமார்த்தியமில்லாம,” “வியாழக்கிழமைன்னா இந்தபஸ்ஸீல கூட்டமாதான் இருக்கும்……
















