வாடாமல் வாழும் வாழைமரங்கள்

சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…

வாசகர் வட்டமும் என் வட்டமும்

படைப்பிலக்கியத்தை எவ்வாறு சென்றடைய முடியும்? எத்தகைய அளவீடுகள் கொண்டு அவற்றை மதிப்பீடு செய்யப் போகிறோம்? இத்தகைய கேள்விகள் 1980களில் இருந்த சிங்கப்பூர் இளைஞர்களுக்கும் இருந்திருக்கும். அதாவது உலகியல் அக்கறையுடன் மட்டும் நிறைவு கொள்ளாத ஒரு சிலருக்கு.

கடந்து வந்த பாதை – தி சிராங்கூன் டைம்ஸ்

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்கவரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது. நான், எம்.கே. குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர்…

அத்தர்

நீண்டநாள் திறக்கப்படாத ஒரு ‘ட‘ வடிவ குடியிருப்பு. அரசாங்கத்தால் வசதியில்லாதவர்களுக்கான மானியத்தில் ஒதுக்கப்படும் தீப்பெட்டி சைஸிலான வீடு. அறையில் புத்தகங்கள் மேல் புழுதி மேகம் போல் படர்ந்து கிடந்தது. கதவைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே புக, தூசுகள் ஒளியில் விண்ணேற்றம் சென்றன.

இறுதி யாத்திரை

ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல.  அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப்…

நிகழ்காலத்தில் இருப்பவர்களும் நித்தியத்துவமானவர்களும்

சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.

ஒளியாலான கதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில்…

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

சிறிய காடும் சில மனிதர்களும்

மொத்தம் 18 தனித் தனி கட்டுரைகளைக் கொண்ட சிறுகாட்டுச் சுனை அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையை, நாமறியாத பல புதிய வண்ணங்களைக் காட்டக்கூடிய தொகுப்பு. மிக எளிமையான மொழி நடையில்  சிரமமற்ற வாசிப்பை வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகு நிலா. இக்கட்டுரைகள் வெறும் தகவல் கோர்வைகளாக அல்லாமல், உயிர்ப்பான அனுபவப் பின்னணியிலிருந்து யதார்த்தமான பாணியில்  எந்த…

த்வந்தம்

நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன்.

நீராலானது

“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு.  அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.

பாடிக் கொண்டே இருக்கும் பறவைகள்

நீ பாடுவதை நிறுத்துவதில்லைவலியைத் துளைத்து வெளியேறும்சிவப்புநிற நாகம்நீ பாடி முடிக்கையில்சூரியனில் இருக்கும் அனார் கவிதை ஒரு பறவை. அது இழப்பு ஏற்பு, வலி, பிரிவு, துக்கம், மரணம், பிறப்பு, மலர்தல், மொக்குதல், மடிதல்  இன்னும் பலவற்றையும் பல வகைகளிலும் பாடிக்கொண்டே இருக்கும். இந்த நொடியும் உலகின் ஏதேனும் ஒரு இடத்தில் பாடல் ஒலிக்கும்.  இவ்வுலகம் ஓய்ந்து…

சிறுகதை எழுதும் கலை

வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…

சிங்கப்பூர் சிறப்பிதழ்

ஜூலை வல்லினம் இதழை சிங்கப்பூர் சிறப்பிதழாக தயார் செய்கிறோம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதழுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க புனைவுகள் குறித்து பிற நாட்டு படைப்பாளிகளும் கட்டுரைகள் அனுப்பலாம். படைப்புகளை 20.6.2021 க்குள் valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

உலக நிலக்காட்சியின் ஊடே அ.முத்துலிங்கத்தின் கதைகள்

1 அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்கும்போது பறவைகளின் ஞாபகம் வருகிறது. வலசைபோகும் பறவைகளில் அந்தந்தத் தேசத்து நீர்த்தேக்கங்களில் அமர்ந்து காதல் வாழ்வைத் தொடங்குகின்றன. அந்த நிலத்து சிறு குச்சிகளை, பட்டைகளை எடுத்துக் கூடு பின்னி, அந்த நிலத்துத் தானியங்களை உண்டு, அந்த நிலத்து வெய்யிலையும் குளிரையும் நீரையும் குடித்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அருகிருந்து மிக விழிப்புடன்…

மலேசிய நவீன கவிஞர்கள் (4) : பூங்குழலி வீரன் கவிதைகள்

எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி ஒருவரிடம் வந்து ‘பழைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் கடவுளைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் கதைகளில் படிக்கிறோம். இப்போது ஏன் கடவுள் யாருக்கும் தெரிவதில்லை,யாருடனும் பேசுவதில்லை’ என்றான். அதற்கவர் ‘ஏனென்றால் இப்போது யாராலும் அவ்வளவு தாழ குனிய முடிவதில்லை. அதனால் தான்’ என்று பதிலளித்தார். கடவுளைக் காணமுடியுமோ…

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது…