காவல்காரன்

ஜன்னலில்லாத மேல் அறையின் விரிப்பு மெத்தையில் அவன் படுத்த முதுகுப்புற இடவின் வியர்வைக்கோடு அழுந்தியிருந்தது. அழுக்காயிருந்த தலையணை உறையில் முகம் புதைத்தபடி இருந்தான். ஏதோ கருகி மணக்கும் வாசனை கும்மென்று அடைத்த போது இதற்கு முன்னர் தெருவில் யாரோ கொதிக்கும் என்ஜின் எண்ணெய்யை ஊற்றிய நாய் துடிதுடித்த போது பொசுங்கிய மயிர்த்தோலின் வாசனை அவனுக்கு நினைவுக்கு…

செந்தாழை

கெம்பித்தாய்கள், குண்டா வாளால் ஒருவனின் தலையைச் சீவி மக்கள் கூடுமிடத்தில் வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள். இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்கு போல் கண்கள் துருத்திக்கொண்டு ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கின்றன. இன்னும் கடலில் மிதக்கும் பிணங்கள்… அவை கரையொதுங்கியதும், நாய் இழுத்துக்கொண்டு வருபவற்றை வந்துவேடிக்கை பார்ப்பவர்களிடத்தில் கூறுவதெல்லாம் என்ன… கவனமாக இருங்கள்… கவனமாக…

நட்சத்திரங்களின் வாக்குமூலம்

இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது…

உயிர்மரம்

1 பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும்…

புதுக்கவிதை நதிக்கரை: ஓர் எதிர்வினை

‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். …

“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…

மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.

பாலபாஸ்கரன் ஆய்வுகள் : அக்கறையும் அணுகுமுறையும்

‘ரேடியோ மலாயாவில்’ ஒலிபரப்பாளர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களை வெளிப்படுத்திய பாலபாஸ்கரன், புதுச்சேரியில் பிறந்து பினாங்கில் வளர்ந்து, கடந்த சுமார் நாற்பதாண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர். இவரது இன்னொரு பரிமாணம் இலக்கிய, இதழியல், சமூக வரலாற்று ஆய்வாளராகத் தொடர்ந்து துல்லியமும் செறிவும்கூடிய ஆய்வுகளை வெளியிட்டு வருவதாகும். தன்னுடைய…

நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்

லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல்  (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை…

அடுத்த அறுவடைக்கான உரமிட்ட மண்

‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்’ என்ற கட்டுரைத் தொகுதி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிவானந்தம் நீலகண்டனால் படைக்கப்பட்டுள்ளது. முதலாவது சிங்கைநேசன் தமிழ் வார இதழின் தரவுகளின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் சிங்கைத் தமிழர்களின் வாழ்வியல் பதிவு. அடுத்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவின் பதிவு.