கடலும் கலங்கரை விளக்கமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் சமூகத்தில் அரசியலில் தனிமனிதரில் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகத் திகழ்கின்றது. உதாரணமாக, உ.வே.சா நம் பண்பாட்டின் வேர்களைத் தேடிச் சென்றார். நாட்டு விடுதலைக்காக காந்தி போன்ற தலைவர்கள் பின்னால் மக்கள் திரண்டார்கள். விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்கள் அமைப்புகளை…

வல்லினம் இலக்கிய முகாம் 30 நவம்பர் – 1 டிசம்பர்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலக்கிய முகாமை ஜா. ராஜகோபாலன் வழிநடத்துகிறார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்பட்டவர். சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இலக்கிய முகாமில் எவ்வாறு ஒரு படைப்பை வாசித்து ஆழமாக அறிவது…

மாயரஞ்சனும் கானரஞ்சனும் – சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள்

80களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். 84 சிறுகதைகளை எழுதிய பிறகு, ஏறத்தாழ 40 வருடங்கள் வரை நாவலே எழுதாமலிருந்தவர், 2019ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலை எழுதினார். அதற்குப் பின்பான இந்த நான்காண்டுகளில் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’…

என் மெத்தையில் ஒரு நாகம்

இரும்பு வேலிக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருக்கும் புதர்களுக்குள்ளிருந்தும், மரங்களில் ஊர்ந்தும் இந்தக் குடியிருப்புக்குள் ஏதும் வரக்கூடுமோ என்ற அச்சமூட்டும் பிரம்மையுடன் இந்த அமைதியான மலைப்பகுதியில் நான் உறங்கத் தொடங்கி சில இரவுகள் கடந்துவிட்டன. கூடவே, நான் வசிக்கும் இந்த வீட்டின் குடியிருப்பாளர் யார் என்ற என் சந்தேகம் என்னை மேலும் அயற்சியுற வைக்கிறது. இந்தச் சிறிய…

மாரிட்ஜானின் உடல்

அந்தியில் நாங்கள் கினரெஜோவுக்குச் சென்று சேர்ந்தபோது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் கீழே பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். செல்லும் வழியெங்கும் அடர்ந்த காட்டிற்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக மின்னித் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் குழுவில் மூத்தவரான எண்பது வயது கடந்த ம்பாஹ் சுரக்ஸோ கூட தன் வாழ்நாளில் அதுவரை இத்தனை மின்மினிகளைப் பார்த்ததில்லை என்று வியந்தார். இருள்…

வருடல்

சிரம்பானில் ‘முருகம்மா’ என்ற பெயரில் ஒருவரைத் தேடுவதென்பது சிரமமான காரியமாக இருக்காது என்றுதான் நினைத்திருந்தேன். முருகம்மா என்ற பெயர் உள்ளவர்கள் நிச்சயம் மிகக் குறைவானவர்கள்தான். அதுவும், என் தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறைகளிலோ பிறந்தவர்களுக்கு நிச்சயமாக முருகம்மா எனப் பெயர் இடப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், யாரிடம் சொல்லித் தேடுவது என்பதில் தொடங்கி எதையெல்லாம்…

தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே…

சுகர் டாடி

அம்மா இறந்து இதோடு நான்கு மாதங்கள் ஆகிறது. நான் இன்னும் அம்மாவுடைய கடைசி காதலன் வீட்டில் தான் இருக்கிறேன். அவர் மிகவும் நல்லவர். என்னை அவர் வீட்டில் இன்னமும் வசிக்க அனுமதிக்கிறார். எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறை இன்னும் எனக்கானதாகவேதான் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து இம்மாதிரி பல வீடுகளின் அறைகளில் தங்கியிருக்கிறேன். அம்மா அவருடைய அப்போதைய…

கு. ப. ராஜகோபாலன் சிறுகதைகள்

தமிழ் நவீன சிறுகதை உலகின் முன்னோடிகளாகத் திகழும் புதுமைபித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி.ராஜநாரயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, ல.ச.ரா, ஜி.நாகராஜன், யுவன் சந்திரசேகர் எனப் பலரின் சிறுகதைகள் தமிழாசியா ஏற்பாட்டில் நிகழும் கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்திருகின்றன. அவ்வகையில் கடந்த ஜூன் 29 எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் 4 சிறுகதைகளைக் குறித்த…

மெளனியின் சிறுகதைகள் உரையாடல்கள்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு சந்திப்பு தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பதினைந்தாவது சந்திப்பாக நவீன தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மெளனியின் நான்கு சிறுகதைகளைக் குறித்துக் கடந்த 17.8.2024 மாலை 3.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் கலந்துரையாடினோம். மெளனி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் எஸ்.மணி…

எழுத்தாளர் அம்பை சிறுகதைகள்

சி. எஸ். லட்சுமி என்ற அம்பை தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். பெண்களின் உலகை வெளிக்கொணரும் வகையில் தன் படைப்புகளைப் பல்வேறு பரிமாணங்களில் படைத்துச் சென்றுள்ளார். அம்பையின் சிறுகதை உலகம் ‘கலைமகள்’ இதழில் தொடங்கியது. பெண்களின் மனநிலை, துயரங்கள், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் விதத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதினார். ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’…