மொபைல் வைத்திருப்போருக்கு மோட்சம் இல்லை

நவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு மூன்று வகையான கவிதைகளைப் பிரதானமாகப் பேசுகின்றன. பிரிவு குறித்தான ஏக்கம், மாயா என்ற சிறு குழந்தையின் உலகம், அலைக்கழிக்கப்படும் சமகால வாழ்வு. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் அந்தத் தொகுப்பிலிருந்து கவிதைகளை மேற்கோள் எடுத்துக்காட்டி எழுதுவது உ.வே.சா காலத்தில் தொடங்கிய வழக்கம். நான் அவற்றிலிருந்து விடுபடலாம் எனக் கருதுகிறேன்.…

வென்று நிலைத்தவை

தமிழ் நவீன இலக்கியம் நிலைபெற்றுள்ள நாடுகளில் மலேசியா தனித்த போக்கைக் கொண்டது. பல்வேறு குழுக்களாக தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்திருந்தாலும், ரப்பர் தோட்டங்களில் பால்மரம் சீவுவதற்காக வந்தவர்களே இங்கு இலக்கியத்தை அதிகம் முன்னெடுத்தனர். இவர்கள், தங்களிடம் இருந்த அடிப்படைத் தமிழறிவையும் கலையுணர்வையும் கொண்டு இலக்கியத்தை வெளிப்படுத்தினர். தமிழ் மொழியின்மீது இருந்த தீராக் காதலால் இவர்களின் படைப்பு முயற்சிகள்…

அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர். அது உண்மைதான். என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என்…

கடவுளின் மலம்

அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள்…

சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019க்கான வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே வல்லினம் இலக்கியக் குழு இவ்விருதை வடிவமைத்துள்ளது.…

சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை. வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன.…

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

கடந்த சில வாரங்களாக மலேசியர்களின் கவனம் முழுக்க கல்வி அமைச்சு அறிவித்த ஜாவி-காட் எழுத்தின் மீது குவிந்துள்ளது. தாய்மொழி பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் நான்காம் வகுப்பில் மலாய் மொழி பாடத்தில் ஜாவி காட் எழுத்து ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியானது முதல் சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. இதன் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பது…

எதையும் மிச்சம் வைக்காதவர்கள்

மனித இனத்தின் வாழ்வியல் இருத்தல் தடங்கள்தான் வரலாறு ஆகிறது. அவ்வரலாறுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடுளில் மிக முக்கியமானது வரலாற்று இலக்கியப் புனைவுகள். எல்லாப் புனைவுகளும் ஏதோ ஒருவகையில் ஏதாவதொன்றின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டுதான் வருகின்றன. அவை கலைநுட்பமாகக் காட்சிப்படுத்தப்படும்போது இலக்கியம் எனும் தகுதியைப் பெற்று மிளிர்வதைக் காணமுடிகிறது. 1970கள் தொட்டே கவிதை, நாவல், சிறுகதைகள்…

கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்

பரந்த இவ்வுலகத்தில் பலவிதமான மக்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று பிளவுப்பட்டுள்ளனர். இவையனைத்தும் ஆதியிலிருந்து உருவாகியவை அல்ல. தொடக்கத்தில் மனிதன், மிருகம், இயற்கை இம்மூன்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்கியது. நாளடைவில் மனிதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தனக்கான தேவைகள் என்னவென்று உணரத் தொடங்குகிறான். அதன்பின், மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழி,…

அறியப்படாத வரலாற்றில் அறிந்த மனிதர்கள்

மலேசிய வரலாற்றில் சுதந்திர காலப்போராட்டங்களையும்,அதற்குப் பிந்திய வாழ்க்கையையும் பலர் நாவலாக புனைந்துள்ளார்கள். அவ்வகை புனைவுகள் பெரும்பாலும் இந்தியர்களை மையப்படுத்திய கதைகளாகவும், கற்பனை அதிகம் கலக்கப்பட்ட மேலோட்டமான கதைகளாகவும் மட்டுமே அமைந்திருக்கின்றன. மலேசிய மக்களின் வாழ்வு என்றால் ஜப்பானிய, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடந்த கொடுமைகள், தோட்டப்பாட்டாளிகளின் கதைகள் என்ற கதைக்களத்திலேயே நான் வாசித்த பெரும்பான்மை நூல்கள் இருந்தன.…

அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி

மலேசிய இலக்கிய வரலாற்றின் வழித்தடத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, வா.முனியன், சை.பீர்முகம்மது, முனைவர் கிருஷ்ணன், முனைவர் சபாபதி, பாலபாஸ்கரன் என பல்வேறு தரப்பினர் எழுதியுள்ளனர். இது அவர்களுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் கிடைத்த தரவுகள், ஆவணங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  வரலாற்றுக்குறிப்புகள் எனலாம். இத்தகவல்களை அவர்கள் முந்தைய ஆய்வாளர்களிடமிருந்தும் அச்சு ஊடகங்களிடமிருந்தும் எடுத்து தொகுத்திருப்பதோடு,…