செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…
வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’
அக்காலத்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குலசேகரத் தம்புரான் என்ற சிற்றரசர் இருந்தார். அரசராக அவர் இருந்தபோதிலும் உண்மையான அதிகாரம் ஏழு நாயர் தரவாட்டு குடும்பங்களிடம் இருந்தது. இவர் ஒருமுறை சமஸ்தானத்தை விட்டு வெளியில் சென்றபோது ரேணுகா என்ற தெலுங்குப் பெண்ணிடம் காதல் கொண்டார். அவளை மணமுடித்து இங்கு அழைத்து வந்தார். தெலுங்கு பெண்ணென்பதால் அவளை வடுகச்சி என்றழைத்து…
புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம்
உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களும் டச்சு ஆட்சியாளர்களும் அத்தீவுக்கு…
நாவல் என்பது… முகாம் அனுபவம்
வல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து…
சு. வேணுகோபாலின் நாட்டார் வழக்காற்றியல் ஒருபார்வை
21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே…
இன்றைய உலக இலக்கியம்: சில புரிதல்கள்
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிறுகதைப் பட்டறையே நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குப்பின் வல்லினக் குழு நடத்திய எந்தக் கலந்துரையாடலையும், நிகழ்ச்சியையும் தவர விட்டதில்லை. அப்படிதான் இந்த முகாமிலும் வல்லினத்துடனான எனது இலக்கியப் பயணம் நான்காவது முறையாகத் தொடர்ந்தது. சிறுகதைப் பட்டறையில் என்னை ஓர்இலக்கிய வாசகியாக உருவகித்துக் கொண்ட நான் இலக்கியத்தின்…
மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை
வல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று…
உரைவழி உணர்ந்த உண்மை
ம.நவீன் நவீன இலக்கிய முகாமில் இடம்பெற்ற ஓர் உரைக்கு என்னுடைய புரிதலை எழுதி தர முடியுமா என வினவினார். நான் மறுத்தேன். திரும்பவும் இரண்டாவது முறையாக மதிய அமர்வுக்குக் கேட்கும் பொழுது, மறுக்க முடியாமல் அரை மனத்தோடு சம்மதித்தேன். சம்மதம் தெரிவிக்கும் பொழுது என்ன தலைப்பு? யார் பேச்சாளர்? என எவ்விவரமும் அறியவில்லை. மதிய உணவு…
சுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்
வல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019 சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…
வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்
திரைப்படங்கள், சீரியல்கள், ஜனரஞ்சக நாவல்கள் என முன்பு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவ்வார்வமென்பது தற்பொழுது மாறி நல்ல இலக்கியங்களை வாசிப்பதன் மீதிலான ஈடுபாட்டினை மிகைப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுகதைகள். சிறுகதையினை வாசித்து முடிக்கையில் எண்ணக்கிடங்கில் கணக்கற்ற எண்ண அலைகளினை என்னுள் உண்டாக்கி மீள்வாசிப்பிற்குள் என்னை மூழ்கடித்து மிதக்க வைப்பதால் கூட இருக்கலாம். வல்லினம் நடத்திய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி…
நவீன இலக்கிய முகாம் (20.12.19 – 22.12.19) காணொலி
This gallery contains 1 photo →