Category: விமர்சனம்

இப்போது உயிரோடிருக்கிறேன்: மரணம் துரத்தும் வாழ்க்கையின் வலி

வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது.  மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து,  ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக்…

வௌவால் தேசம்: வீழ்ச்சியின் வரைவியல்

1 நம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது /எழுதப்பட்டது 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. ஜெ.ஹெக்.நெல்சனின் மதுரை கண்ட்ரி மானுவல் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு தொடக்க சாதனை. ஜெ.ஹெக். நெல்சனில் இருந்து ஒரு வரலாற்று எழுத்து நிரை எழுந்தது. ராபர்ட் கால்டுவெல், டபிள்யூ. ப்ரான்சிஸ், ஹெக்.ஆர். பேட் என ஜெ.ஹெக். நெல்சன் வழி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பின்…

திரிபுகளின் இருள்வழியே – சிகண்டி

நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…

நட்சத்திரவாசிகள்: நுண் அதிகார மையங்கள்

வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின்…

அல் கொஸாமா: அறியாத நிலப்பயணம்

மனித குலத்தின் தோற்றம் குறித்த பல அபுனைவுக் கட்டுரைகள் உண்டு. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது தொடங்கி அவ்வழி இனக்குழு மனப்பான்மை உருவாகிறது. பின் அது எவ்வாறு தற்காலத்தில் பெரிய பிரிவினைகளாக வளர்ந்து விட்டது என்பதும் மறுபக்கம் சிறு சிறு குழுக்கள் எவ்வாறு இணைந்து பெரு மதங்களாக ஆகின்றன என்பதும் தொடர்ச்சியாக விளக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகிறது.…

குமரித்துறைவி: மகளாகிய அம்மையும் அப்பனாகிய மகனும் 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில…

சுண்ணாம்பு அரிசி: பெருமதியாகாத தகவல்களின் கலை

பிரிதோர் காலத்தின் பதிவுகளாக, ஒரு சமூகத்தின் ஆழ்மன ரணங்களாக துயரோலங்களின் எச்சங்களாக இப்படி பல்வேறு படிமங்களால் படைப்பிலக்கியத்தின் தளம் ஆழம் செல்கிறது. காலம் விழுங்கிவிட்ட பெறும் வரலாற்றை, பெறும் சம்பவங்களை, பண்டைய வாழ்வை, விழுமியங்களைப் புனைவுகள் மீட்டெடுக்கின்றன. நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. எனவே புனவுகளைக் காலத்தின் பிரதிகள் என வகைப்படுத்தலாம். ஒரு வாழ்வைத் தரிசிக்க முடிகின்ற…

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்: ஒரு சாவுக்குப் பின்பான கதை

‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ மயிலன் ஜி சின்னப்பனின் முதல் நாவல். மருத்துவ துறையை பின்புலமாக கொண்ட நாவல். ஆசிரியரும் மருத்துவ துறையை சேர்ந்ததால் அதன் நம்பகத்தன்மைக்காக (Authenticity) கூடுதல் கவனம் பெறுகிறது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு 200 பக்கங்களில் எழுதப்பட்ட சிறிய நாவல். இதன் வடிவம் ஒரு டைரி குறிப்பு போல உள்ளது. ஒரு குறிப்பிட்ட…

சு. கமலா சிறுகதைகள்: விதைகளை மட்டுமே உற்பத்திச் செய்யும் பூ மரங்கள்

மலேசியச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதும் முன், அக்கதைகள் குறித்த அபிப்பிராயங்கள் எதன் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதை விளக்க வேண்டியுள்ளது. இங்கு ரசனை விமர்சனத்திற்கான மரபு என ஒன்று வலுவாக உருவாகாத சூழலில் இவ்வகை விளக்கங்கள் அவசியமாகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை கல்வியாளர்களின் விமர்சனங்கள் வழியாகவே இலக்கியத்தின் தரம் நெடுங்காலமாக அளவிடப்படுகிறது. நவீன இலக்கிய…

சிகண்டி: கலை உருவாக்கும் வாழ்வின் புதிய மதிப்பீடுகள்

‘பேய்ச்சி’க்குப்பின் நவீனின் இரண்டாவது நாவல் ‘சிகண்டி’. ‘பேய்ச்சி’ நாவல் தடை ஏற்படுத்திய இலக்கிய அதிர்வே ஓயாத நிலையில் நவீனின் இந்நாவல் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து வெளிவந்துள்ளது. ம. நவீனின் படைப்புகளைச் சார்ந்து எதிரும் புதிருமாக ஓர் இலக்கிய வட்டம் காத்திருக்கிறது என்றாலும் அப்புனைவை ஒட்டிய ஆக்ககரமான கட்டுரைகள், விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரமாவது ஆரோக்கியமான இலக்கியச்…

சிகண்டி : திட்டமிடப்பட்ட விதியின் கதை

இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும்…

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்: ஒரு பார்வை

வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம்,…

அரவின்  குமாரின் சிறுகதைகள்: சில குறிப்புகள்

அனைவரிடமும் சொல்வதற்குக் குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் என்பார்கள். இருந்தாலும் அதைச் சொல்லத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு, அப்படிச் சொல்ல முனைபவர்களுக்குத் தேவை மொழியறிவு. சொல் தெரிவு மற்றும் சொற்சேர்க்கை, வாக்கியத்தைச் சரியான முறையில் அமைக்கத் தெரிந்திருப்பது. ஒரு மொழியில் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி இது எனலாம். இத்தகுதி இருந்தால் எழுதுபவன் தான் கருதுவதில் கணிசமான…

இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

இந்துஜா ஜெயராமன் மலேசிய தமிழ்ப் புனைவுலகத்தின் அண்மைய வரவு. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நாவல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுத் தனக்கென இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் என ஒரு சிலரால் புகழ் மாலைகள் சூட்டப்பட்டும் வருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஜெ.இந்துஜா ஜெயராமன் சிறுகதைத்…

மௌனங்களின் உக்கிரத்தைப் பேசும் லதாவின் கதைகள்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.