பெருஞ்செயல்களின் கொண்டாட்டம்: முக்கோணக்கதைகள்

‘முக்கோண கதைகள்’ நிகழ்ச்சிக்கு முதல் நாளே (31.5.2025) அ. பாண்டியன், தேவகுமார் ஆகியோர் கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தனர். YMCA கட்டடத்தில் தங்கும் வசதியும் இருப்பதால் அவர்களுக்கான அறையை அங்கேயே பதிவு செய்திருந்தேன். முதல் நாள் இரவே மண்டபத்தைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்தோம். பதாகை பொருத்துவது, நாற்காலிகளை அடுக்குவது எனச் சில பணிகளை முன்னமே செய்து வைப்பது…

ஐந்தடியில் ஓர் உலகம்: மலாயில் மொழியாக்கம் கண்ட தமிழ்ச் சிறுகதைகள் குறித்த உரையாடல்

இன்னொரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின் ஆழ்மன வெளிப்பாடுகளை மொழிபெயர்ப்பு இலக்கியமே நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு உலகம் முழுவதும் தீவிரமான வாசகர்கள் உள்ளனர். முக்கியமான உலக இலக்கியங்கள் தமிழில் காலந்தோறும் மொழியாக்கம் கண்டு வந்திருக்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடக்கக் காலத்தில் சில மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பரவலான வாசகப் பரப்பைச்…

இளையோர் குறுநாவல் போட்டி

வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும். இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை: முதல் பரிசு: RM 1500.00 இரண்டாம் பரிசு: RM 1000.00 மூன்றாம்…

“சினிமா துறை என்பதை சமுராய் வீரனின் பாதை அல்லது துறவியின் பாதை என்று சொல்வேன்,” – சஞ்சய் பெருமாள்

இயக்குநர் சஞ்சய் பெருமாள் மலேசியத் திரையுலகச் சூழலில் ‘ஜகாட்’ படத்தின் வழி நன்கு அறியப்பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது மலேசியத் தேசியத் திரைப்பட விருது விழாவில் ‘ஜகாட்’ படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதையும் சஞ்சய்க்குப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘ப்ளூஸ்’, ‘மாச்சாய்’ ஆகிய…

கடுவெளி காந்தள்

“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.” சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில்…

புதையல்

1 அரியது எனத் தோன்றும் பொருட்களையெல்லாம் சேர்த்து வைக்கும் பழக்கம் எந்தப் பிராயத்தில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது என சரியாகச் சொல்ல முடியவில்லை. என் ஊரிலேயே நன்கு பம்பரம் விடத் தெரிந்தவரான பாண்டி அண்ணன் அழகான கோலிக்குண்டுகளைச் சேர்ப்பவராக இருந்தார். என்னுடனேயே சுற்றித் திரியும் ஓவு என்ற சின்னப்பையன் எதிர்க்காற்றில் வேகமாகச் சுற்றுவதற்கு இசைவான ஓலைகளைச்…

உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை

மலேசிய சீன, மலாய், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிதலையும் இந்த இலக்கியங்களுக்கிடையே அணுக்கமான உறவையும் வளர்க்கும் விதமாக தற்போது முழு வேகத்துடன் வல்லினம் செயல்படுகிறது. வல்லினம் தொடங்கப்பட்ட 2009 முதலே, மலேசியாவி்ன் மலாய், சீனம், ஆங்கில இலக்கியங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது பன்மொழி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்புகள், மற்ற மொழி எழுத்தாளர்களின்…

அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…

விண்ணிலிருந்து வீழாதவர்களின் கதைகள்

அண்மையில் வெளியீடு கண்ட ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை வல்லினத்தின் பெரு முயற்சிக்கான உருவகமாகவே காண்கிறேன். மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்த அரிய முயற்சியானது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதியதொரு பாதையைத் திறந்து வைத்துள்ளது. மலேசிய நவீன தமிழ் இலக்கிய அறிவுத்துறை வளர்ச்சிக்கும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.…

தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன்

19.12.2024, சான் பிரான்சிஸ்கோவில் நுரையீரல் சிக்கலால் (Idiopathic Pulmonary Fibrosis) பாதிக்கப்பட்டிருந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், தனது 73வது வயதில் இறந்தார் என்ற செய்தியை இணையத்தில் படித்ததும், மனம் கனத்தது. யாரிடமாவது இந்தக் கடும் செய்தியைப் பகிர்ந்தால், கண்களில் வரும் கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடலாம். தொலைப்பேசியை எடுத்து, திரையில் விரலைத் தேய்த்தபோதுதான் தெரிந்தது அதிகாலை மணி…

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?  

பகுதி 1 ஒரு கிராமத்தில் வசிக்கும் தன் இளைய சகோதரியைப் பார்க்க வந்திருந்தாள் அவளின் மூத்த சகோதரி. மூத்தவள் நகரில் வசிக்கும் ஒரு வணிகனை மணமுடித்திருந்தாள், இளையவளோ கிராமத்தில் ஒரு விவசாயிக்கு  மனைவியாக இருந்தாள். மாலை தேநீர் வேளையில் மூத்தவள் பட்டணத்தின் தன் வசதியான வாழ்க்கையைப் பற்றி தற்பெறுமையோடு பேசிக்கொண்டிருந்தாள். நகர்ப்புறத்தில் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப்…