Category: கட்டுரை

பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

இயற்கை எழில் நிறைந்த மலேசியாவில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது. சூழலியல் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளின் தேடல்கள் அதனால் மனிதனுக்கான நன்மை, தீமைகள், அல்லது நாட்டின் பொருளாதரத்திற்கு அதன் பங்கு என்ற நிலையிலேயே இருக்கும். இயற்கைக்கும் அது சார்ந்த உயிரினங்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவற்றைக் கலைவதற்கான வழிகள் குறித்தும்…

கதைத் திருவிழா சிறுகதைகள்

முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும்  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள். வெண்முரசு நிறைவுற்றபோது  பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது.…

மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்

‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவே கண்ணில் படும்’ என்று உளவியலில் ஒரு கூற்று உண்டு. உங்கள் கையில் சுத்தியும் அரிவாளும் மட்டுமே இருக்குமென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவும் தலைகளாகவும் தென்படும் என்று அதை நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சமூகத்தின் பிரச்சனைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கைகளில்…

குரோசாவாவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில்…

போரின் கதைகள் : தாசெக் ஷாஹ்டு

‘தாசெக் ஷாஹ்டு மற்றும் வேறு சில கதைகள்’ (Tasik Syahdu dan cerita-cerita lain) தேசிய இலக்கியவாதியும் மூத்தபடைப்பாளியுமான சமாட் சாய்ட் எழுதிய சிறுகதை தொகுப்பு. 2003 -இல்  பிரசுரிக்கப்பட்ட இத்தொகுப்பின் 22 கதைகளும் அவரே தேர்ந்தெடுத்து பிரசுரித்தவை. இத்தொகுப்பில் ‘ரிம்பா செனி செவோராங் செனிமான்’ அதாவது ஒரு கலைஞனின் கலை வனம் என்ற தலைப்பிலான …

வல்லினம் சிறுகதை சிறப்பிதழ்

தமிழில் சிறுகதைகள் ஆரம்பத்தில் இருந்தே உலகத்தரத்தை ஒட்டிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில நாவல்களைப் பார்த்து எழும் பிரமிப்பு, சிறுகதைகளைப் பார்த்து எழாததன் காரணம் நாம் தமிழில் அதற்கு இணையான பலவற்றைப் படித்ததன் காரணமாக இருக்கக்கூடும். இணைய இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்கள், தமிழ் சிறுகதைகளுக்கு மேலும் ஒரு வலுவான நடைமேடையும், அதிக வாசகர்களை அவர்கள் இருக்கும்…

‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர்…

மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்

[1] கவிதை கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த…

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

‘வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும்…

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா…

அன்னை ஆடும் கூத்து

அறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால்…

நீலகண்டம் : பிரியத்தின் திரிபு

இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது. நவீன வாழ்க்கையில் குழந்தைப்…

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக…

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

(1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம்,…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…