Category: சிறுகதை

தேவனின் நாயனம்

சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது. “டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?” பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை…

மோகப்புயல்

சின்னச்சாமி அண்ணா வண்டியை நிறுத்திவிட்டு தூக்கம் தொலைத்த முகத்தோடு சோர்வாக வந்தார். “வாண்ணா” என்று ஸ்டூலை எடுத்துக் கொடுத்தேன். “வேண்டாம்” என்று சொல்லி விட்டு கடைப்பலகையின் வலது ஓரம் அமர்ந்தார். முதுகுப்பக்கம் சட்டை வேர்வையில் ஒட்டியிருந்தது. நான் கடையைவிட்டு இறங்கினேன். தலை குனிந்தபடி தரையில் ஓரிடத்தையே பார்த்தபடி இருந்தார். நேற்று சாயுங்காலம் வந்து நின்றவரை “உக்காருண்ணா”…

கர்ப்ப விதானம்

(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை) “பொட்டக் கமுனாட்டிக்கு வந்த வாழ்வ பாரு? நீயெல்லாம் மனுச ஜாதியில சேர்த்தியா? புடுக்க அறுத்துகிட்டு, மார வளர்த்து, பூவும் பொட்டும் வைச்சிருந்தா, நீ பொம்பளையா ஆயிடுவியா? உன்னால பொம்பளைங்க மாதிரி புள்ளையைப் பெத்துக்க முடியுமா?” எதன் பொருட்டோ பொதுவெளியில் தொடங்கிய விவாதம்,…

கேளாத ஒலி

(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை) பத்து நிமிடங்களைத் தாண்டியும் ஜானுடனான உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. கிஷன் பேசுவான் என்று ஜான் சொன்னப் பின்பும் மெளனமே நீடித்தது. ஜான் என்பது அவரின் உண்மையான பெயர்தானா என்பது கூட தெரியாது. பவுல் ,மோரீசன், என்று ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில்…

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

இது இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வமான கடைசி விடியல். கடைசி விழிப்பும் கூட. விடியல் வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். விழிப்பு என்பது உறங்கினால் மட்டும்தானே சாத்தியம்? அவரால் படுத்த நிலையிலேயே உடலின் பாரத்தை உணர முடிந்தது. குளிரூட்டியையும் மின்விசிறியும் மீறி லேசாக வியர்ப்பது போலிருந்தது. அவர் படுத்தவாறே அறையை ஆராய்வது போல பார்வையைச் சுழற்றினார். இரவு…

புரட்சிக்காதலன்

“எனக்கு என்ன ஆயிற்று?.. ஒன்றும் இல்லையே.. நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு ஏன் சிந்தனை என்பது இவ்வளவு பாரமாக ஆகிப்போனது?” சிந்தித்துக்கொண்டே விழா அரங்கின் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்துவிட்டேன். வந்தவுடனேயே ரிஷானாவின் ஆடி காரைப் பார்த்துவிட்டிருந்தேன். மூன்று லிட்டர் V6 வெண்ணிற ஆடி Q7 மாடல். அந்தக் காரின் தனித்த அம்சமே அதை பார்த்தவுடன் புதியதா பழையதா…

பிரவாகம்

அருகருகே இரண்டு நட்சத்திரங்களைக் கண்டபோது எம். எஸ். சுப்புலட்சுமியின் இரண்டு வைர மூக்குத்திகள் ஞாபகத்துக்கு வந்தன. சமீபத்தில் யாரோ பாடலின் லிங்க்கை வாட்ஸாப் குரூப்பில் அனுப்பியிருந்தார்கள்.  ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா….’ அவர் பாடப்பாட  இரண்டு புறங்களிலும் மூக்குத்திகள் ஒளியைக் கொட்டின. ஒளி கொட்டுமா என்ன… என்னவோ அப்படித்தான் அவளுக்கு நினைக்க தோன்றிற்று. பாட்டிலிருந்து சிந்தனை மூக்குத்திகளுக்குத் தாவியது. மனம்…

கோட்ட வூடு

கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன். பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போ தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம். வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால் நீட்டிட்டு உக்காந்திருக்குற…

சாம்பல்

“இது என்ன புது சடங்கா இருக்குது. எங்க தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா யாருக்குமே இப்படிசெஞ்சதில்லை” என்றாள் சுந்தரி. “எரிச்சதுக்கு மறுநாள் பால் ஊத்தறதுக்கு சுடுகாட்டுக்கு போவாங்க. அங்க ஒரு பிடி சாம்பல எடுத்து ஒரு சொம்புல போட்டு துணியால மூடி கட்டிடுவாங்க. அப்பறம் நேரா சீறங்கப்பட்டணம் போயி கரைச்சிட்டு வந்துடுவாங்க. அதத்தான் நான் பார்த்திருக்கேன்” வேலு…

வீடு திரும்புதல்

இரண்டு, மூன்று மாதமாகவே எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தைத் திறக்கலாம் என்று பேச்சு இருந்தது. கடைசியில் உண்மையாகிவிட்டது. தினம் இருபது பேராக வரச் சொல்லியிருந்தார்கள். இன்றுபிரசாத்தின் முறை. பிரசாத் ஒரு பி. பி. ஓ ஊழியர். அலுவலக வாகனத்தில் ஏறியவுடனே ஓட்டுநர் ‘குட் மார்னிங்’ வைத்து ‘வெல்கம் சார்’ என்று கூறி ஒரு சாக்லேட்டும் கொடுத்தார். ஓட்டுநர் பெயர்…

பிரிட்னி

கோயில் வாசலில் சட்டையை முந்தித் தள்ளியத் தொப்பை வைத்திருக்கும் தன் நண்பன் மகேன் ராவோடு காத்திருந்தான் தமிழ்செல்வம். மௌன சிரிப்புடன், வெட்கப்பட்டு, கீழே குனிந்தப்படி அவனைக் கடந்தாள் தமிழ்செல்வி. அவளுக்கு முன்பே மாப்பிள்ளை யாரென்பது காட்டப்பட்டிருக்க வேண்டும். நேற்று இரவே இந்த தமிழைப் போலவே எல்லாத் தகவலையும் சமூக ஊடகங்களின் வழியாக அந்த தமிழும் ஆராய்ந்திருப்பாள்.…

அன்னம்

கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண  காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை…

உய்வழி

‘மெய் இன்று கண்டேனடா,  முகமன்று போலின்றி நிறமாறிப் போனதை கண்டேனடா. சொல்லெல்லாம் எரிக்க எரிக்க உளமெல்லாம் கசக்க கசக்க நுதல் சுருங்கும் தருணமெல்லாம் கண்டேனடா! மா தவம் நீங்கிட வந்தேனடா! அயோத்தி வந்தேனடா!ஐயம் என்மேனி கண்டாயோடா! கொடுந்தீ சொல்லும் கேளடா’உச்சஸ்தாயில் சீதையின் குரல். சிவந்த கனலின் நிழல் போலசெந்துணிச்சுருளைகள் முன்னே படர, காந்தள் மலரின் இதழ்…

மூவிலைத் தளிர்

பாடியநல்லூர் குமரப்பாவுக்கு நீரிழிவு நோயால் வலது கால் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதோ வலது காலில் பின் பகுதியில் எதுவோ குத்தி காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மூன்று மாதம் ஆகியும் ஆறவில்லை. அந்த முதல் புண்ணைச் சுற்றி மேலும் சில இடங்களிலும் புண்கள் வந்திருந்தன. அவையும்…

பெருங்கை

கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன். சிறிய அறைக்கு வடக்குப்பக்கமாகத் திறக்கும் ஒரே ஒரு ஜன்னல் தான். அதை மூடவும் முடியாது. இரு ஜன்னல் கதவுகளும் எப்போதோ விழுந்துவிட்டன. அதற்கு அப்பால் கேசவனின் கரிய விலாப்பக்கம் வந்து முழுமையாக மூடிவிட்டதென்றால் படுத்திருக்கும் இடத்திலிருந்து அவன் பார்க்கும்போது வெளியே கூரிருட்டு நிறைந்திருக்கும். பெரும்பாலும் அவனுக்குக் கேசவனுடன் இரவில்தான்…