
பொதுவாக பெண்களைவிட ஆண்களே கூச்சசுபாவம் மிக்கவர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கையில் அவர்கள் வீரத்தைக் குறித்து சவடால் பேசுவதும் அதுவே ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் உளறிக்கொட்டுவது அல்லது பேசத்தயங்குவதுமாக இருக்கிறார்கள். ஆணுக்கு பெண் ஒரு புதிர். தன் இரகசியங்களை வெளிக்காட்டவேண்டிய இடம். இப்படி நேரடியாக அணுகுவதில் உள்ள தயக்கத்தால், அதேநேரம் பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்ற…