
1 வடக்கு வேல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். பர்மிங்ஹாமில் ஏறினார். என் வலதுபக்க இருக்கையில் வந்து அமர்ந்தார். இடப்புற ஜன்னல்வழி, எதிர்ப்புறம் விரையும் வெட்டவெளியில் லயிக்க முயன்றேன். ரயிலேறிய நிமிடத்திலிருந்து இதே முயற்சிதான். முடியவில்லை. காட்சிகளும் ஒலிகளும் வாசகங்களும் எனக்குள் அலைபாய்ந்துகொண்டிருந்த விதம் அப்படி. அடம் பிடிக்கும் குழந்தைபோல, புறக் காட்சியுடன்…