கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை

‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…

‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…

இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…

GTLF & வல்லினம் இலக்கிய விழா

GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர்   ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை…

“கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா

அண்மையில் மேற்கொண்ட நேபாளப் பயணத்தில் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனிரா முன்னாள் குமாரி தேவி. ஏப்ரல் 2001இல் பதான் தர்பார் சதுக்கத்தின் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்குப் பத்து வயது. 2011ல் தன் பதினைந்து வயதில் பருவமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எளிய பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து…

“விளம்பர வெளிச்சம் பட்டவர்களை மட்டுமே எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளது!” மு. இளங்கோவன்

முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம்,…

வகுப்பறையில் ஒரு திமிங்கலம்

பவித்ரா தனது இடது கையை உயர்த்தி ஆங்கிலத்தில் சப்தமாகச் சொன்னாள் “வகுப்பு முடிய இன்னும் ஐந்து நிமிஷம் தானிருக்கிறது.” அதைக் கேட்டதும் மாணவர்கள் சிரித்தார்கள். அவளது கேலியைக் கவனிக்காமல் சிவானந்தம் மோபிடிக் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பறையிலிருந்த மாணவர்களில் எவரும் பாடத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் இவர்கள் உலகப் புகழ் பெற்ற நாவல் ஒன்றை அறிந்து கொள்ள…

ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை…

அழைப்பு

அந்தி சற்று தயங்கியபடியே மயங்கிக் கொண்டிருக்கிறது. பாவமன்னிப்புப் பெற ரோமன் கத்தோலிக்கர்கள் மாதா கோவிலுக்குச் செல்லும் வெள்ளிக்கிழமையின் மாலை இது. நான் அங்குச் சென்று அதைச் செய்வது தெரிந்தால் அத்தை கோபப்படுவாள். யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மட்டுமே நம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட முடியும். ஒருவேளை எனக்கு அது விடுதலை அளிக்கலாம்…

டோலிசாமி

மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளிகளால் மன்னரைப் போலவே மதிக்கப்பட்டார் ராமசாமி. பெயரே ராமசாமியாக அமைந்ததால் இன்னொரு சாமியை இணைத்து ‘ராமசாமி சாமி’ எனக் கூப்பிட சாமிகளின் வாய்க்கு அவ்வளவு பொறுமை இல்லை. தனியாகப் பட்டப் பெயரையும் அவருக்குச் சூட்டுவதில் எந்தச் சாமியும் மும்முறமாக இதுவரை முயன்றதில்லை. மூக்கு நீளமாக இருந்ததால் ஒருவருக்கு ‘மூக்கு…

தேவனின் நாயனம்

சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது. “டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?” பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை…