
தேர்ந்தெடுத்த நூல்களினை வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பினை உள்வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு அவரின் எளிய உரைநடை சொல்லாடலே காரணமாகும். மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தொகுப்பில் தற்கால சமூகப் பிரச்சனைகளின் ஊடே வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையினை மையமாகக் கொண்டுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். கதையில் வரும் மையக் கதாபாத்திரங்கள்…











