நீயின்றி அமையாது உலகு – 4

புத்தக அலமாரியை சரிப்படுத்த எத்தனிக்கும்போது சில சமயங்களில் இது நடக்கலாம்.  பழைய நினைவுகள்.  மறக்க முடியாத தருணங்கள்.   கொடுத்ததும் கிடைத்ததும்.   வலிகள்.   இன்ப அதிர்ச்சி என அடுக்கிக்கொண்டே போகலாம் கிடைத்தது நமது நாட்குறிப்பாக இருக்கும்போது. . . நாட்குறிப்பு என்பதைவிட குறிப்புகள் எழுதுவதில் இருந்துதான் என் எழுத்து இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு எதையும்…

சிற்றிதழ் என்ற இலக்கிய வடிவம் இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்தும் தொடரும் – ந. முருகேசபாண்டியன்

ந. முருகேசபாண்டியன், சொந்த ஊர் மதுரை. கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். இவர் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி, சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003- ஆம்…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 2

அமர்வு இறுக்கமாக இல்லாமல் சுமுகமான நிலையிலேயே சென்றது. நண்பர்கள் எழுந்து நீர் அருந்த, கைகால்களை உதறிக்கொள்ள, கழிப்பறைக்குச் செல்ல என, தேவையான பொழுதுகளில் வெளியேறி வந்ததால் நீண்ட உரையாடல்களில் சிக்கல் இல்லாமல் மற்ற அனைத்து நேரங்களிலும் ஈடுபாட்டுடன் ஒன்றியிருக்க முடிந்தது. மூன்றாவது அமர்வும் குறித்த நேரத்தில் முடிய, அடுத்த அமர்விற்கான நேரத்தை மீண்டும் மறு உறுதிப்படுத்திக்…

இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து,…

அடையாளம்

விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது…

நகையாயுதம்

மக்கள் கலைகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை அதன் ஊடாக அமைந்திருக்கும் நகைச்சுவைக் கூறாகும். நகைச்சுவையின் வழி உலகமக்களைக் கவரவும் ஒன்றுதிரட்டவும் முடியும். நகைச்சுவை, மக்களின் மனோவியலை மென்மைப்படுத்துகிறது. மனக்கட்டுகளை அவிழ்த்து மனதை இலகுவாக்கி உணர்ச்சிகளைச் சமன்படுத்துகிறது. நகைச்சுவை என்பது ஒரு சொல்லில் இருந்தோ ஒரு அசைவில் இருந்தோகூட வெளிப்படலாம். நமக்கு எது நகைப்பை உருவாக்குகிறது என்பது…

விடுபடுதல்

மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும்…

நீயின்றி அமையாது உலகு – 3

துர்க்கனவு போல அவள் முகம் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவள் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. விடுமுறையைச் சம்பளமாக்கிட தற்காலிகமான வேலையை தேடிக்கொண்டிருந்தேன். அச்சமயம் தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். இதற்கு முன் அங்கு வாழந்தவர்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு…

மண்டை ஓடி: ஒரு நாவலின் சில அத்தியாயங்கள்

சில முன் குறிப்புகள் நான் சிறுகதைகள் படிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. உள்நாட்டு படைப்புகளைப் படித்து நீண்டகாலம் ஆகிறது. அப்படியே விமர்சனங்களும் திறனாய்வுகளும். இந்த புத்தகத்தில் எழுத்தாளர் இமையத்தின் உரையைப் படிப்பதைத் தவிர்த்தேன். சிறுகதைகள்- பொதுப்பார்வை தொடக்கம், உள்ளடக்கம், முடிவு, கரு, உத்தி என்பனவற்றிலிருந்து சிறுகதைகள் பல வகையான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. சிறுகதை அதற்கான வடிவத்தையும், சொல்லும்…

ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

ஏக்நாத் எழுதியிருக்கிற ஆங்காரம் நாவல் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தினுடைய கதையோ அல்ல. ஒரு ஊரைப் பற்றிய, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப்பற்றிய கதை என்று சொல்லலாம். கதை நடக்கிற ஊரிலுள்ள மனிதர்களைக் காப்பதற்காக ஊருக்கு வெளியேயும், ஊரைச் சுற்றியும் இருக்கிற மந்திரமூர்த்தி, பூதத்தார், சொரி முத்தையன், சொரி முத்து அய்யனார், வடக்குவா…

ஒளி புகா இடங்களின் ஒலி: எளிமையில் உள்ள உண்மை!

எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார். எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய…