கரிப்புத் துளிகள் : கட்டுமானங்களுக்கு அடியில் கொதிக்கும் உப்பு

பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின்…

தாரா: ஓர் அறச்சீற்றம்

ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான். ‘தாரா ஓர் அறச்சீற்றம்’ நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப்…

கரிப்புத் துளிகள்: மானுட அகம்பாவமும் அகூபாராவும்

மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன. சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை…

சுழி

வெளியே நல்ல வெயில். ரேஷன் கடையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டார்கள். சாமான்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தேன். வீட்டு வாசலில் இருந்து பார்த்தபோது வீட்டின் பிரதான கதவு திறந்தே கிடந்தது. ஸ்கேன் எடுக்கச் சென்றிருந்த தாயும் மகளும் வந்துவிட்டார்கள். வாசல் கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு உள்ளே ஏதோ ஒரு…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

மலேசியாவில் சௌந்தரின் யோகப் பயிற்சி

சௌந்தர் அவர்கள் தமிழகத்தில் முதன்மையான யோகப்பயிற்சியாளர்களில் ஒருவர். மரபார்ந்த யோகப் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார்.  1950ல்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். சௌந்தர் அந்த குரு மரபில் வந்தவர். எனவே அதே அளவு தீவிரத்துடன் அவரின்…

“யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளி. இன்னும் அதிகமாகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டிய முதன்மையான படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், மொழிப்பெயர்ப்பு என இடையறாது இயங்கும் யுவன் சந்திரசேகர் அவர்கள், நவம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் GTLF (ஜார்ட் டவுன் இலக்கிய விழா) நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை…

ரசவாதம்

1 கரட்டுப்பட்டியின் முதல் மூன்று குடும்பங்களில் ஒன்று ராமசாமிப் பத்தருடையது. அப்படித்தான் அப்பா சொன்னார். மற்ற இரண்டு, செல்லமுத்துப் பூசாரி குடும்பமும், காவல்கார மூக்கையா மாமாவுடையதும். ஆவலாகக் கதைகேட்கும் பிராயம் எனக்கு. ஆதாரங்களெல்லாம் கேட்கத் தெரியாது. ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாற்றுச் செய்திகளே நம்பத்தக்கவை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு, அல்லவா! முதல் வாக்கியத்தை என்னிடம் சொல்லவில்லை…

சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது.…

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…