
சீமைச் சாராயத்தின், புதிதாக இழைத்த மரச்செதுக்கின் நெடி அறையெங்கும் நிரம்பியிருந்தது. “டே, இங்க வாடா? எங்க… அம்பி சொல்றதச் சொல்லு… அம்பி சொல்லு…இது பேரு என்ன?” பிள்ளை, அம்பி இரண்டு பேர் மஜாவிலுமாக ஒரு பத்து பேர் இருந்தார்கள். பிள்ளையின் ரசிகர் ஒருவர் பாரீஸிலிருந்து தருவித்திருந்த மதுக் குப்பி நடுநாயகமாக அமர்ந்திருந்தது. அரை போதையில் தலை…