
இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை…










