
சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும் விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…














