
வல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள்…










