என்னை மீட்ட வல்லினம்

திடீரென மலேசிய இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாய் ‘காதல்’ என்ற இதழ் வந்திருந்தது. இளைஞர்கள் தங்களிடம் உள்ள மொத்த திறமைகளையும் கொட்டி அதனை உருவாக்கியிருந்தார்கள். புத்தகத்தில் வெளிவந்த நேர்காணலுக்கான படங்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தன. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். ‘காதல்’ புத்தகத்துக்குப் பிறகுதான் வல்லினம் வெளிவந்தது. வல்லினத்தின் வெளிப்பாடு என்னை எழுதத் தூண்டியது. வல்லினத்தில் தொடர்ந்து…

வல்லினத்தின் புதிய எழுத்துப்போக்கு

இன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம்…

வல்லினம் ஏற்படுத்திய வாழ்வின் திருப்பம்

எனக்கும் வல்லினத்திற்குமான தொடர்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்டது. ஒரு நாள் திடீரென நவீன் என்னை அழைத்து அவரது சிறுகதைகளை நான் ஆய்வு செய்ய முடியுமா என வினவினார். மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் கூட நமக்கு அது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என சொல்லி அந்த விமர்சனத்துக்கு ஒப்புக்கொண்டேன். அதனை கடந்த ஆண்டு மார்ச்…

வல்லினத்தின் ஆவணப்படங்கள்

எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக வல்லினம் குறித்து எனக்கு தெரியும். எதையும் தொடங்குவது சுலபமானது ஆனால் அதனை தொடர்ந்து செய்வது சவாலான காரியம், அதற்கான ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தாலின்றி அதனை செய்ய முடியாது. வல்லினம் பழைய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டறிந்து மீண்டும் எழுத வைத்து அதற்கான அங்கிகாரம் கொடுத்து வருகின்றார்கள். மிகவும் முக்கியமான செயல்பாடாக…

வல்லினத்தின் தொடர் பயணம்

வல்லினத்தின் நூறாவது இதழ் வருவதில் மகிழ்ச்சி. இச்சமயத்தில் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன் குறித்து நினைத்துப் பார்க்கின்றேன். 2004 என நினைக்கிறேன். அப்போது நவீன் நயனம் அலுவலகம் வந்திருந்தார். இதழின் வடிவமைப்பையும் அதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் செய்துக் கொடுக்க முடியுமா என கேட்டார். அப்போது அதற்கான சாதனங்கள் எங்களிடம் இருந்தன. அதனை செய்வதற்கான ஆட்களும் இருந்தார்கள். நானும்…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

மலேசியாவில் நடந்தது என்ன? – அ.மார்க்ஸ்

கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை…

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர்…

பலி

செல்வி வெளியில் வராமலிருந்தது நளினிக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கமாக தூரத்தில் கார் வரும் சத்தம் கேட்டதுமே பரபரக்க வெளியில் வந்துவிடுவாள். காரிலிந்து வெடுக்கென கைப்பையை இழுத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைவது ஒரு வழிகாட்டியின் தோரணையை ஒத்திருக்கும். செல்விக்கு பதிலாக இன்று பணிப்பெண் அவசரகதியில் வெளிபட்டு நின்றாள், முகத்தில் கவலை ஊசலாடியது.  “என்னாச்சி? ஏதும்…