காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 9

ஒருகாட்சியை அப்படியே கண்முன் விரியுமாறு விவரிப்பதை படிமம் என்று சொல்கிறோம். சங்கப்பாடல்களில் அதுவும் அகநானூற்றில் பெரும்பாலானவை படிமங்கள் கொண்டவைதான். இந்தப்படிமங்கள் எதற்கு எடுத்தாளப்படுகின்றன என்றால் உணர்வை அழுத்தமாகச் சொல்ல அதுவே ஏதுவாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ‘சுண்ணாம்புக்கல் வெடித்ததுபோல் மலர்ந்திருக்கும் வெண் கடம்ப மலர்’ என்றொரு உவமை. அந்தக்காலத்தில் எல்லாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்புக்கல்லை வாங்கி வந்து…

கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

சிங்கையிலிருந்து இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமி ஆகியோர் அதிகாலை 5மணிக்கு மலேசியாவில் வந்து இறங்கியவுடன் கலை இலக்கிய விழா தொடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. உற்சாகமாக இருவரும் காத்திருந்தனர். தங்கும் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டபின் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் 11 மணிக்கு இராம கண்ணபிரான் அவர்களை ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஏற்கனவே கேள்விகள்…

கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

மலேசியாவில் இவ்வளவு தீவிரமாக கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வல்லினம் குழுமமே என்பது இலக்கியத்தைச் சார்ந்தவர்களுக்கு சென்றடைந்திருக்கும். இலக்கிய நிகழ்ச்சிகள் ஏன் கலைத்தன்மை (creativity) சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதை சிந்தித்திருக்கிறது வல்லினம். அந்தச் சிந்தனையை செயல் வடிவத்தில் பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. எத்திசையில் நிகழ்ச்சி நகரும் என்ற சுவாரஸ்யம். நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார்…

ஒசாமா: பசியும் பசிக்காத கடவுளும்

சோவியத் யூனியன் படை எடுப்பு, தாலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி, பின் லாடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாதப் படை, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத ராணுவப் படை, அமெரிக்கா ராணுவம் தலையீடு போன்றவற்றில் சிக்கித் தவித்த ஆப்கானிஸ்தான்,  மில்லியன் கணக்கில் கைம்பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் 30 ஆண்டுகள் நடந்த போரின் வழி உருவாக்கியுள்ளது. இவர்களின் கணவர்கள்…

திறவுகோல் 3: குருவிக் கோட்டம்

2014 ஆம் ஆண்டு, அங் மோ கியோ நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு காட்சி என்னைக் கவர்ந்திழுத்தது. வட்ட வடிவ வெள்ளை நிற மேசை ஒன்றின் நடுவில் பறவைக் கூடு ஒன்று முட்டைகளோடு அமைக்கப்பட்டு அதைச் சுற்றி பலவிதமான காகிதப் பறவைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சில காகிதப் பறவைகள் மேசைக்கு மேலே பறக்குமாறு செய்யப்பட்டிருந்தன. முழுவதும் வெண்மையாகக் காட்சி…

வாழ்வதின் பொருட்டு : உலகமயமாக்கலும் புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்களும்

‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’ நற்றிணை – 153. தனிமகனார். பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம்பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப்…

வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

எட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர்.  எல்லா கதைகளையும் தொகுத்து  படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம். முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த…

பொட்டலம்

உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா,…

நீயின்றி அமையாது உலகு 9

பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…

வலி அறிதல் (முதல் பரிசு)

அப்பாவுக்கு எம்ஜியாரை அவ்வளவாக பிடிக்காது. “நல்லா கவனி, அப்படியே தூணு பின்னால ஒளிஞ்சிகிட்டே கண்ணக் கசக்குவான் பாரு..”, என்று எள்ளல் தொனிக்க சிரித்தபடியே அவர் அடிக்கடி சொல்லும் ஒற்றை வரியே எம்ஜியாரைப் பற்றிய அப்பாவின் பரிகாசம் கலந்த விமரிசனமாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவரின் வயதேயொத்த ராஜூ அங்கிள், பலராமன் மாமா போன்ற பலராலும்  “என்னாமா…

உப்பு (இரண்டாவது பரிசு)

நெற்றியின் வியர்வை  உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன. மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான…