சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

19

வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

முகப்பு

ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி…

மட்டக்களப்பில் வல்லினம் 100

த

சில முறை தமிழகம் சென்று வந்திருந்தாலும் இலங்கை செல்லாதது மனதில் ஒரு குறையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் வெளியிட்ட ‘வல்லினம் 100’ குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்நூல் சென்று மலேசிய – சிங்கப்பூர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது. அப்போதே அதற்கான திட்டமிடலும் செய்ய…

யாழ்ப்பாணத்தில் வல்லினம் 100

சர

வல்லினம் இலக்கியக் குழு மேற்கொண்ட இலங்கை இலக்கியப் பயணத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள நல்லூரில் வல்லினம்100 நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வல்லினக் குழுவினரும் யாழ்ப்பாண வட்டார வாசகர்களும் கலந்து கொண்டு வல்லினம் 100-இல் வெளிவந்த படைப்புகளைத் தொட்டுப் பேசி கலந்துரையாடினர். முதலாவதாக கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நெறியாளராகப் பொறுப்பேற்று வல்லினத்தின் தற்கால இலக்கிய நடவடிக்கைகளைத் தொட்டு…

கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்

அ.பா

இலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை…

கொழும்பில் வல்லினம் 100

கங்கா

கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…

சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2

writer_su_venu_gopal

கேள்வி 1: நீங்கள் எழுத்தாளராக யார் மூலம் அல்லது எதன் மூலம் வந்தீர்கள் சர்? சரியாகக் கேட்பதென்றால் எந்தப்பள்ளி? ஜெயமோகன் சு.ரா பள்ளியிலிருந்து வந்தது போல. கேள்வி 2 : விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறீர்கள்? விமர்சனம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? பாலன், மலேசியா அன்புடன் பாலனுக்கு இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதென்றால்…

மண்புழுக்கள் : மூதாதையர்களின் உயிரணுக்கள்

மண்புழுக்கள் 01

வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க…

446 A

pradeep story3

பாஸ்கர் சார் பென்சால்டிஹைடு உருவாக்க வினையை எழுதி முடித்த போது மணி சரியாக 4.34. காலாண்டுத் தேர்வுகள் முடிந்திருந்ததால் வகுப்புகள் சற்று தளர்வாகவே நடந்தன. ஐந்து இருபது வரை நீடிக்கும் சிறப்பு வகுப்புகள் சில தினங்களாக இல்லை. இருந்தும் நரேனால் 446A-ஐ பிடிக்க முடிவதில்லை. மூன்று நாட்களாக ஏதோவொன்று அந்தப் பேருந்தைப் பிடிக்க விடாமல் தவறச்செய்து…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 3

16649148_1367735143269500_6377318202211850528_n

இளம் தலைமுறையின் இடைக்கால ஈடுபாடு ரெ.பாண்டியன், விஜயன், அரவிந்தன், ராஜசேகர், ராஜாராம், சூரியரத்னா, பாலமலர் போன்றவர்களால் 1988ல் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் நவீன இலக்கிய வாசிப்பு, விமர்சனத் தேடலுக்குக் களம் அமைத்தது. இதே காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவின் தமிழ்ப் பகுதியும் உயர்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் மத்திய குழுவும் இணைந்து உயர்நிலைப்…

இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்

தளையசிங்கம்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் ‘இலங்கை,நவீன்‘ எனும் குறிப்பை வாசித்தபோதே அதை ஒட்டிய சர்ச்சை எழும் என அறிந்ததுதான். ஒரு பயணக்குறிப்பு அதை வாசிக்கும் நபர்களின் தேடலில் / தேவையில் இருந்து உள்வாங்கப்படுகிறது. உண்மையில் என் பயணக்குறிப்புகள்  எதை ஒட்டியும் ஆழமான பதிவொன்றைச் செய்யவில்லை. அவை அப்போதைய எனது மனப்பதிவின் புகைப்படங்கள். ஜெயமோகன் பிரதானமாக ஒரு நிலத்தின்…