ராம மந்திரம்

“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம். “பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக்…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…

ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே…

ஃபஷ்றி கவிதைகள்

நினைவில் தோன்றும் அடர் வனங்களின்கிளை ஒன்றில்,அலைந்து தனித்த பறவையான பொழுதுஅதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவுநினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்சருகுகளையும் கூழாங் கற்களையும்அள்ளிச் சுமந்தோடுகிறேன்சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றனஎதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதிசொற்கள் வெடித்துச் சிதறுகின்றனசிதறிய சொற்கள்,கிளைகளாகி எட்டுத் திக்கும்எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றனஅதில் ஒரு துளி மட்டும் உங்களை…

5 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,…

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும்…

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்: ஒரு பார்வை

வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம்,…

பொன்னூல் வலைகள்

அருண்மொழி அவர்களை முதலில் நான் சந்தித்தது ஊட்டி முகாமில்தான். சந்தித்தேன் எனச் சொல்வதைவிட அவரது ஆளுமையை தொலைவில் நின்றபடி வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. தனது கருத்துகளை அவர் வலுவாகப் பதிவு செய்யும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பின்னால் அவருக்கு இருக்கும் வாசிப்புப் பின்புலத்தை முகாம் முடிவதற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். தொடர்ந்து கெடாவில் நடந்த ‘பேய்ச்சி’…

1992

1 ஜீவானந்தம் பஸ்ஸை விட்டு இறங்கிய போது அவனை கடந்து சென்ற ரிக் வண்டி அவனுக்கு அப்பாவை ஞாபகப்படுத்தியது. வீடு சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கசந்தது. பையை தோளில் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஏதேதோ கலவையான எண்ணங்கள். தங்கை; அப்பா; பணம்; தோட்டம்; கல்யாணம் என்று உதிரிக் காட்சிகள். இன்னும் ஒரு…

அந்தம்

நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…

அசைவும் பெருக்கும்

தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று…

ஊர்த்துவ தாண்டவம்

“சிவனோட அடிமுடியும்ம்ம்…அடிமுடியும்…” இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க…

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல: வாசிப்பனுபவம்

தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான…

கடைசி நாற்காலிகளும் வகுப்பறைகளும்

சிறுவர், சிறுமியர்களின் மனம் தணிக்கைகள், தடைகள் என எதுவுமின்றி புறச்சூழலை முற்றிலுமாக உள்ளிழுக்கும் திறன் கொண்டது  என்கிறார் மரியா மாண்டிசோர்ரி. விளையாட்டு, கற்பனை மற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் என்பவைகள்தான் இந்த இளம்பருவத்தின் முக்கியமான மூன்று வெளிப்பாடுகள். பெற்றோரும், ஆசிரியரும் சிறுவர், சிறுமிகளின் இந்த வெளிப்பாடுகளை கவனமாக கண்காணித்து அந்த குட்டி முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிலாளிகளாக…

சாயம்

“இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?”  உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்”   “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?”…