
என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…













