
இமயமலைத் தொடரில் பத்தாவது உயர்ந்த சிகரமான அன்னப்பூர்ணாவை நோக்கி ஏறும் நடை பயணம் அன்று காலையிலேயே தொடங்கியது. நேபாளின் தலைநகரமான காத்மாண்டு நகர நெரிசலிலிருந்து எங்களின் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மலை பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தது. போதுவாக மலை பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், பசியின்மை…














